போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக 18 வயதுக்குக் குறைவான சிறார்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறையின் சீனியர் எஸ்.பி திவ்யா ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ”புதுச்சேரியில் அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் உறுதிபூண்டிருக்கும் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை, 18 வயதுக்குட்பட்ட சிறார்களை மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் எனப் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

கடந்த 18.10.2026 அன்று வில்லியனூர் – கொம்பாக்கம் சாலையில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் சிறார் ஒருவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டியவர், அதில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர், ஒருமாதக் குழந்தை என அனைவரும் காயமடைந்தனர்.
அந்தச் சம்பவம் தொடர்பாக, சிறார் வாகன ஓட்டுநர் மீதும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அவரது பெற்றோரில் ஒருவர் மீதும் கிழக்கு போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும், சில பெற்றோர்களும் வாகன உரிமையாளர்களும் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது தொடர்ந்து கவனத்திற்கு வருகிறது. இத்தகைய செயல்கள் சிறார்களின் உயிருக்கு மட்டுமின்றி, பிற சாலைப் பயனாளர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 199A-இன் கீழ், சிறார்கள் வாகனம் ஓட்டுவது கடுமையான சட்ட விதிமீறலாகும் என்பதை புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.
18 வயதுக்குக் குறைவானவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. சிறார் ஒருவர் மோட்டார் வாகனம் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி அவரது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் பொறுப்பேற்க நேரிடும். அதற்காக ரூ.25,000 வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

மேலும், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி, சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் சிறார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். சட்ட விதிகளின்படி, அச்சிறார் 25 வயதை அடையும் வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்றவராக இருப்பார்.
மேலும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி 12 மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்களும் வாகன உரிமையாளர்களும் பொறுப்புடன் செயல்பட்டு, சட்டப்படி தகுதியற்ற சிறார்களை எந்தச் சூழ்நிலையிலும் மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் எனப் புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்? உளவுத்துறை வார்னிங்
October 24, 2026
நடுவானில் பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்.. விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பலி
October 24, 2026
பரிதாப நிலையில் பாகிஸ்தான்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.10,000 ஆக உயர்வு! மக்கள் கடும் பாதிப்பு!
October 24, 2026
அரசு விடுதி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !
October 24, 2026
8 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த நாட்டாமை.. இறந்தவர் உடலை எரிக்க ரூ.2 லட்சம் அபராதம்!
October 24, 2026
GOOGLE நிறுவனம் ஏற்படுத்திய இயற்கை பேரழிவு! பின்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
October 24, 2026
இந்தியாவின் மின்தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு இதுதான் தீர்வா..?
October 24, 2026
3 நாளுக்கான உணவு, தண்ணீர், பணம் சேமித்துக்கொள்ளுங்கள்.. பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!!
October 24, 2026
iPhone Duo: 5 நிமிடத்தில் 'Out Of Stock'.. 4.5 லட்சம் ரூபாய் போனுக்கு இவ்வளவு டிமாண்டா..?
October 24, 2026
பழைய பொருட்களைத் தூக்கி எறியும் காலம் முடியப்போகிறது! – வணிகத்தில் AI-ன் அடுத்தகட்டப் பாய்ச்சல்
October 24, 2026
Rybakina readies for title defence at Ningbo Open in final with Fernandez
October 24, 2026
Sudan’s soaring fuel prices make getting by harder for workers
October 24, 2026