சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ” பெரிய படம், சின்ன படம் என்று பட்ஜெட்டை வைத்து பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், பெரிய படமா? சிறிய படமா? என்று படத்தின் வெற்றி தான் முடிவு செய்கிறது.
நிறைய சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றி பெறும் போது, அது பெரிய படங்களுக்கும் பிளஸ் ஆக அமையும். புதிய தொழில்நுட்ப வல்லுனர்கள், திறமையான கலைஞர்கள் இயக்குநர்கள் சினிமாவிற்குள் வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஓடிடி தளங்களின் வளர்ச்சியினால் சின்ன பட்ஜெட் திரைப்படங்களை ஓடிடியில் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. தற்போது நல்ல திரைப்படமாக இருந்தால் பட்ஜெட்டை பார்க்காமல் தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.
சிறை, டூரிஸ்ட் ஃபேமிலி, தாய்கிழவி போன்ற திரைப்படங்களின் வெற்றி தரமான கதைகளை தொடர்ந்து படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.
இந்த திரைப்படங்களின் வெற்றியினால் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்த முடிகிறது, புதிய கதைகளையும் கொண்டு சேர்க்க முடிகிறது. சிறிய பட்ஜெட் திரைப்படங்களை நான் பாராட்டும் போது எனக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது.
அவர்களைப் பாராட்டுவதில் எந்த ஒரு தயக்கமும் இருக்கக்கூடாது. உலகத்தில் சிறந்த விஷயம் மற்றவர்களை பாராட்டுவது தான்.

ரஜினி சாருக்கு போன் செய்து நான் பாராட்டியது கூட அப்படித்தான். அதற்கு , நான் ரஜினி சாரை நேரில் அழைத்து பாராட்டியது போல ஒரு வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்கிறார்கள்.
இது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. யாரென்று தெரியாதவர்களிடம் இருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் நம்மை எப்படி பாதிக்க முடியும்?” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
6 எபிசோட்.. த்ரில்லர் வேட்டை.. சரவணன், வரலட்சுமியின் 'சட்டமும் நீதியும் 2' வெப் தொடர் விமர்சனம்!
October 27, 2026
எடை குறைப்பு சிகிச்சையால் வந்த ஆபத்தா? சிம்புவின் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி.. அந்தணன் விளக்கம்
October 27, 2026
இழவு வீட்டுல VIP தரிசனம் கேட்குறாரா? அஜித்தை வெளுத்து வாங்கிய பாலாஜி பிரபு!
October 27, 2026
பாரடைஸ் நானி மாதிரி இருக்கீங்க? வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்!
October 27, 2026
‘கொலையாளி அல்ல; நான் காதலன்!' ஷாருக்கானின் கிங் படக் கதையே இதுதானா!
October 27, 2026
தீபாவளி ரேஸில் சேஃப் ஜோனில் விஜய் ஆண்டனி.. ஓடிடி உரிமத்தை பெத்த தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!
October 27, 2026
Patient living in 'horrific pain' due to UK-wide drugs shortage
October 28, 2026
GTA 6's rumored file size ahead of November 19 launch sparks comparisons with previous editions
October 27, 2026
You Can Unlock Lots Of Free Stuff In Pokemon Go’s Halloween 2026 Event
October 27, 2026
Remember That Time BioWare Made A Sonic The Hedgehog RPG?
October 27, 2026
Starc's admission: 'A lot of things that haven't felt right'
October 27, 2026
You Can Make Your WoW: Forever Character Now And Be Ready For Launch
October 27, 2026