ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகாரத்தை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஜம்புத்தீவு பிரகடனத்தை’ வெளியிட்டு, இந்த மண்ணின் சுதந்திரத்துக்காகத் தங்கள் கடைசி மூச்சு வரை போராடி உயிர் நீத்தவர்கள் மன்னர்கள் மருது சகோதரர்கள்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 24 ஆம் தேதி அன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தமிழக அரசு சார்பிலும், 27-ஆம் தேதி சமுதாயத் தலைவர்கள் சார்பில் காளையார்கோவிலிலும் இவர்களது குருபூஜை விழாக்கள் தமிழகம் முழுவதும் பெரும் ஆரவாரத்துடன் களைகட்டுகின்றன. ஆனால், இந்த ஆரவாரங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைதான் வரலாற்று ஆர்வலர்களையும் மருது சகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தினரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகிலுள்ள என்.முக்குளம் கிராமமே மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருதுவின் பூர்விகச் சொந்த ஊர். தென்னிந்திய பாளையக்காரர்கள் கூட்டமைப்பை உருவாக்கி ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர்கள் 1801 அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

விடுதலைப் போராட்டத் தியாகிகளான மருது சகோதரர்களுக்குத் திருப்பத்தூரில் அரசு சார்பில் மணிமண்டபமும் முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை தெப்பக்குளம், திருமங்கலம் போன்ற இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு சிறப்புகளுக்குரிய மருது சகோதரர்கள் பிறந்த சொந்த ஊரான என்.முக்குளத்தில் நினைவுத் தூண், சிலை, நினைவு மண்டபம் என எந்தவொரு நினைவுச் சின்னமும் இதுவரை அரசால் உருவாக்கப்படவில்லை.

மருது சகோதரர்கள்

மருது பாண்டியர்கள் வாழ்ந்த அந்த ஓட்டு வீடு தற்போது மண் மேடிட்டு, புல் மண்டிக் கிடக்கும் பரிதாப நிலையை நேரில் கண்டு ஆய்வறிக்கை வெளியிட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப், “ஆங்கிலேயருக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கிய வரலாற்றுப் பெருமை கொண்ட மருதுபாண்டியர்களின் பூர்வீக வீட்டைத் தமிழக அரசு உடனடியாக நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களில் ஒருவரான முத்துப்பாண்டி, “2010-ல் வாரிசுதாரர்களும் கிராம மக்களும் சேர்ந்து சொந்த நிதியில் முக்குளத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட முயன்றோம். ஆனால், அரசின் முறையான அனுமதியும் நிதியும் இல்லாததாலும், சட்டப் பூர்வமான சிக்கல்களாலும் அப்பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. தற்போதைய த.வெ.க அரசாவது முக்குளம் கிராமத்தில் புதிய நினைவு மண்டபத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

More in TamilNews
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் “தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் October 28, 2026 "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை October 28, 2026 அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? October 28, 2026 செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் October 28, 2026 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி October 28, 2026 சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல October 28, 2026

See all 589 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *