அமைச்சர் மரிய வில்சன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அன்பில் மகேஸ் மீதான வழக்கு தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியா முழுவதுமே உன்னிப்பாகக் கவனிக்கும் ஒரு வழக்காக உருவெடுத்துள்ளது. இதில் சட்டம் தன் கடமையைத்தான் செய்திருக்கிறதே தவிர, தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருப்பதற்கு 100% வாய்ப்பில்லை. கரூர் சம்பவம் நடந்தபோதே அன்பில் மகேஸ் மருத்துவமனைக்குச் சென்றதை உலகமே பார்த்தது. அன்றைய தினம் என்ன நடந்திருக்க வேண்டும் என்பதன் தொடர்ச்சியாகவே, இன்றைக்கு அவர் ஆதரவாளர் பேசிய கருத்துகள் அமைந்திருக்கின்றன. இதன் மூலம் அவர்கள் எத்தகைய எண்ணத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியது யார் என்பது கூடிய விரைவில் தெரியவரும் என்று கூறப்பட்டது. தற்போது அவர்களே அதை ஒப்புக்கொண்டுவிட்டார்கள். எனவே, இவரை வைத்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவர் எதைக் கூற வந்தாரோ அதை முழுமையாகக் கூறவில்லை; இவரிடம் தீவிரமாக விசாரித்தால் மட்டுமே இதன் பின்னணியில் உள்ள பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
மூன்று கோப்புகள் என்றில்லை, எண்ண முடியாத அளவிற்குத் தொடர்கதையாக ஏகப்பட்டது உள்ளது. இதற்கு காலம்தான் ஒவ்வொன்றாக விடை சொல்ல வேண்டும். இது வெறும் தொடக்கம்தான். முன்னாள் அமைச்சர் காவல்துறையை மிரட்டினார் என வழக்கு செய்யப்பட்டிருக்கிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து விவகாரங்களிலும் சட்டம் தனது கடமையைச் சரியாகவே செய்யும். வி.எஸ். பாபு நலமாக உள்ளார். மெதுவாகக் குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்த தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவரது மருத்துவ அறிக்கைகள் ஊடகங்களுக்குத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அமைச்சர்களும் அவரை நேரில் சென்று பார்த்துள்ளனர். நானும் தொடர்பில் தான் இருக்கிறேன். ஊழலுக்கு எதிராக இந்த அரசின் இந்த அதிரடி நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாகும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை
October 28, 2026
அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன?
October 28, 2026
செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய்
October 28, 2026
'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி
October 28, 2026
சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல
October 28, 2026
“மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" – டிடிவி தினகரன்
October 28, 2026
Three youths arrested for possession of Tapentadol tablets in Vriddhachalam
October 28, 2026
Vedanta Aluminium Q2 Results: Profit doubles to Rs 6,187 crore, revenue jumps 41%
October 28, 2026
US stocks today: US stocks turn choppy as megacaps offset chip gains before Fed meet
October 28, 2026
"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை
October 28, 2026
Pakistan’s Rauf sanctioned for conduct contrary to ‘spirit’ of cricket
October 28, 2026
'மூக்குத்தி அம்மன்-2 என் மனதிற்கு நெருக்கமானப் படம்.!'- நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி
October 28, 2026