நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு அறிவித்திருந்தார். ட்ரம்ப் சொன்ன தேதி நெருங்கிவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடைபெறும்… சமாதான உடன்படிக்கை எட்டப்படும் என்று நினைத்தால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஈரான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது அமெரிக்கா. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறது அது.

ஈரானோ தங்களுடைய நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை… சமாதானம் எல்லாம் என்று சொல்லி வருகிறது.

ஈரான், அமெரிக்கா
ஈரான், அமெரிக்கா

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 27), ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி, உச்சத் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் மொஹ்சென் ரெசாயி சந்திப்பு நடந்துள்ளது.

இது தேசியப் பாதுகாப்பு தொடர்பான உயர் மன்றக் கூட்டம் ஆகும்.

ஈரானின் பாதுகாப்பு குறித்து…

ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான முழுமையான கட்டுப்பாட்டைத் தக்கவைப்பதன் மூலம் தேசிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வது, நீடித்த பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது எனப் பேசியுள்ளனர்.

ஈரான் போர் குறித்து…

போரை முடிவுக்குக் கொண்டுவர நாட்டின் அதிகாரிகள் விதித்துள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது நிலவும் ‘போரும் இல்லாத, அமைதியும் இல்லாத’ நிலையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மொஜ்தபா வலியுறுத்தியுள்ளார்.

More in TamilNews
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் “தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் October 28, 2026 "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை "திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை October 28, 2026 அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன? October 28, 2026 செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ – நம்பிக்கையுடன் சிறுமியின் தாய் October 28, 2026 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி 'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி October 28, 2026 சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல சோப்பு நுரை: “என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" – செல்லூர் ராஜூ கலகல October 28, 2026

See all 589 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *