தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் மோனிகா ராணா, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். மருத்துவத் துறையிலிருந்து குடிமைப் பணிக்குத் தேர்வாகி, தற்போது மாவட்ட ஆட்சியர் பொறுப்பை எட்டியிருப்பது அவரது பணிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தனது பயிற்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

மோனிகா ராணா

தொடர்ந்து, மலைப்பகுதி மற்றும் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றிய அவர், தற்போது தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தின் எட்டாவது ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் மோனிகா ராணா, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

மருத்துவப் படிப்பு, ஐ.ஏ.எஸ் பயிற்சி, பல்வேறு நிர்வாகப் பொறுப்புகள் எனப் படிப்படியாக உயர்ந்து வந்துள்ள அவரது அனுபவம், தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More in TamilNews
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன? ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன? October 30, 2026 கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு October 30, 2026 நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்! நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்! October 30, 2026 என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார் என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார் October 30, 2026 அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக – அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள் அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக – அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள் October 30, 2026 நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்! நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்! October 30, 2026

See all 590 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *