தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரிடம் பேசினோம்.

”தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிம் வழங்கும் திட்டத்தைக் கடந்த மாதம் தொடங்கி வச்சார் முதலமைச்சர் விஜய்.

மோதிரங்கள் அரசு பரிந்துரைத்த ஒரு கிராம் எடை ப்ளஸ் 22 கேரட் தரத்துல தரப்பட்டு வருது. நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மோதிரத்திலும் BIS ஹால்மார்க் முத்திரையும், 6 இலக்க HUID எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கு.

பிரத்யேகமா வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான பேக்கிங்கில் இந்த மோதிரங்கள் அடைக்கப்பட்டு, அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Hospital (Representational Image)

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது தெரிஞ்சதுமே தமிழ்நாடு முழுக்கவே பரவலா அரசு மருத்துவமனைகளைத் தேடி வரத் தொடங்கிட்டாங்க கர்ப்பிணிகள்.

வழக்கமா அரசு மருத்துவமனையைத் தேடி வருகிறவர்களைத் தாண்டி நிறையப் பேர் வர்றதால இப்ப பிரசவ வார்டுகள்ல அவர்களுக்கு பெட் கிடைக்கறதுல சிக்கலா இருக்கு. அதனால சுகாதாரத்துறை உயர‌திகாரிகள் இந்த விஷயத்துல கவனம் செலுத்தி கூடுதல் பெட்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார்கள் இவர்கள்.

தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இந்த மாதம் மட்டும் அதாவது அக்டோபரில் இதுவரை 498 டெலிவரிகள் நடந்துள்ளதாம்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் எண்ணிக்கை கூடியதால் சில கர்ப்பிணிகளை பெட் இல்லாமல் மருத்துவமனை வராண்டாவில் தங்க வைக்கப்பட, அதை சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் நடந்திருக்கிறது.

பரமக்குடி மருத்துவமனையில் இன்றைய தேதிக்கு பிரசவ வார்டில் இருக்கும் 60 பெட்டுகளிலும் கர்ப்பிணிகள் அட்மிட் ஆகியிருக்கிறார்களாம். கடந்த காலங்களில் 30, 40 அட்மிஷன்கள் நடந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

இது குறித்து மருத்துவர்கள் சிலரிடம் பேசியபோது,

“ஆரம்பம் முதலே அரசு மருத்துவமனைக்கு வர்ற தாய்மார்கள் இருக்காங்க. பிரசவம் வரைக்குமான செக்அப்களை தனியார் மருத்துவமனைகளில் பார்த்துட்டு பிரசவத்துக்கு மட்டும் வருவாங்க சிலர். தனியார் மருத்துவமனைகள்ல பிரசவத்துக்கு ஆகுற செலவு குறித்து யோசித்து இங்க வருவாங்க இவங்க. ஆனா இப்ப இந்த திட்டம் பத்தி தெரிஞ்சதுல இருந்து செக்அப்வரை தனியார் மருத்துவமனை போனவங்க, கொஞ்சம் வசதியானவங்களா இருந்தாக்கூட அரசு மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கியிருக்காங்க.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்குற திட்டமா பாக்குற கோணத்துல இது நல்ல விஷயம்தான். அதேநேரம் இப்படி வர்ற தாய்மார்களை நல்லவிதமா கவனிக்க கூடுதல் பெட்கள் அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாத் தேவைங்கிற விஷயத்தையும் அரசு கவனத்தில் எடுக்கணும்” என்கிறார்கள்.

More in TamilNews
`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு `நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு October 29, 2026 “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்" – சீமான் அறிவிப்பு! October 29, 2026 மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்? October 29, 2026 கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக! கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக! October 29, 2026 பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு! பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு! October 29, 2026 பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன் பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன் October 29, 2026

See all 608 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *