நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே சார்ந்துள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறையில் தொடங்கி நோயாளிகளின் படுக்கைகளில் நாய்கள் படுத்திருப்பது வரை பல்வேறு சேவைக் குறைபாடுகள் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மின் இணைப்பில் பழுது எனக் கூறி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் ஒளியைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்தும் உணவுகளை வழங்கியும் வரும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோத்தகிரி அரசு மருத்துவமனை

பின்னணி குறித்து தெரிவித்த கோத்தகிரி அரசு மருத்துவமனை பணியாளர்கள், “நேற்று காலையில் இருந்தே மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐ.சி.யூ பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நேற்று இரவு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. வேறு வழியின்றி சில நோயாளிகளை எமர்ஜென்சி பிரிவுக்கு மாற்றி கண்காணித்து வருகிறோம்” என்றனர்.

கோத்தகிரி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் சப்ளை சரியாக இருக்கிறது. மருத்துவமனையின் ஒன்றிரண்டு பிளாக்குகளில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றனர்.

More in TamilNews
"அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் 1 நாள் வேட்டி சட்டை அணியவேண்டும்"- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு "அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் 1 நாள் வேட்டி சட்டை அணியவேண்டும்"- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு November 1, 2026 ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆகணும்.. டெல்லி ராம்லீலா நோக்கி இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆகணும்.. டெல்லி ராம்லீலா நோக்கி இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி November 1, 2026 ஆட்சி மாறிய பின்.. ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள்! தற்போதைய நிலவரம் என்ன? ஆட்சி மாறிய பின்.. ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள்! தற்போதைய நிலவரம் என்ன? November 1, 2026 டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..இன்று முதல் எகிறும் ரேட்! ஒரு குவாட்டர், ஃபுல் விலை எவ்வளவு? டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..இன்று முதல் எகிறும் ரேட்! ஒரு குவாட்டர், ஃபுல் விலை எவ்வளவு? November 1, 2026 "டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் எனப் பெருமை பேசும் தவெக அரசு இதை செய்யுமா?" – எடப்பாடி பழனிசாமி "டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் எனப் பெருமை பேசும் தவெக அரசு இதை செய்யுமா?" – எடப்பாடி பழனிசாமி November 1, 2026 மத்திய அரசை கவிழ்க்க சதி! பகீர் கிளப்பிய ஜேபி நட்டா.. டெல்லி பேரணியால் ராகுல் காந்திக்கு வார்னிங் மத்திய அரசை கவிழ்க்க சதி! பகீர் கிளப்பிய ஜேபி நட்டா.. டெல்லி பேரணியால் ராகுல் காந்திக்கு வார்னிங் November 1, 2026

See all 630 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *