கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அன்பில் மகேஸ் அளித்த ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அன்பில் மகேஸை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில் வாதிட்டதாவது, “இந்த விவகாரத்தில் நியாயமான சுதந்திரமான விசாரணை தேவை. நீதிமன்ற உத்தரவின்படி அன்பில் மகேஸுக்கு முதல் வகுப்பு சிறை வழங்கப்படவில்லை, சரியான உணவு வழங்கப்படவில்லை. மேலும், ‘மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதால், 2 முதல் 4 கிலோ வரை அவருடைய உடல் எடை குறைந்துவிட்டது.
நீதிமன்றம் கூறிய பிறகு கூட வீட்டு உணவு வழங்கப்படவில்லை. அதனால் அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு வழங்கப்பட வேண்டும். அவர் எங்கும் தப்பி ஓடமாட்டார். குற்றத்தை நிரூபிக்கும் வரை அவர் நிரபராதி தான். பணம் கேட்டதாகவோ, வாங்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. அரசியல் காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸை நவம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம் அன்பில் மகேஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” அவர் செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல்… 300, 400 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் அங்கு கேட்பது சாப்பாடு சரியில்லை என்று.
‘நான் இதை செய்யவில்லை’ என்று மனுவில் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் அன்பில் மகேஸ் ஜாமீன் கோருவதா? இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, “தவெக அரசை ‘சோப்பலாங்கி அரசு, சுயபுத்தி இல்லாத அரசு’ என விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், ” ஸ்டாலின் போன்ற முதிர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்பாராதது.
ஒரு தலைவரே இப்படி பேசினால், கீழ்மட்டத் தலைவர்கள் இதைவிட மோசமாகத்தான் பேசுவார்கள். முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
வேலைக்கு நடுவே திடீரென மயங்கி விழுந்த இளம்பெண் – அறிகுறி இன்றி வரும் இந்த பாதிப்பை தடுப்பது எப்படி?
October 31, 2026
"கெரியரின் உச்சத்தை விட்டுட்டு என்னடா பண்ண போற…!" Suriya-வின் "SCENE"-ஆன ட்ரைலர்!
October 31, 2026
பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை – 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது?
October 31, 2026
இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்
October 31, 2026
அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் வெற்றியும் தோல்வியும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?
October 31, 2026
'80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது' – குண்டடிபட்ட இந்திரா காந்தியை காப்பாற்ற நடந்த கடைசி நேர முயற்சிகள்
October 31, 2026
Scene Audio Launch: "12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வர காரணம் அவர்தான்..!" – நஸ்ரியா
November 1, 2026
Scene Audio Launch: "அதை பார்த்துட்டு எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது!" – கார்த்தி கலகல
November 1, 2026
Dorothy: "15 வருடங்கள், ஆயிரம் கனவுகள், எண்ணற்ற போராட்டங்கள்!" – நெகிழும் சனந்த்
November 1, 2026
Scene : "தனுஷ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்; ஏன்னா..!" – நெகிழும் சூர்யா
November 1, 2026
Petrol and diesel prices today, November 1: Check fuel rates in different cities across India
November 1, 2026
Rahul Gandhi rally protest today, Nov 1: Check full traffic advisory, road diversions, railway, bus, metro routes here
November 1, 2026