சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
சூர்யா பேசுகையில், “என்னுடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ திரைப்படத்திற்குத் தேவா சார்தான் இசையமைத்தார். இந்த மேடையின் வாயிலாக அவருக்கு என்னுடைய பிரார்த்தனைகளையும், அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். “அவள் வருவாளா…” என்று அன்று அவர் போட்ட பாட்டுதான் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்து வந்திருக்கிறேன் என்றால், அதற்குத் தேவா சார் எனக்குக் கொடுத்த தொடக்கம்தான் காரணம். உங்களை எப்போதும் என் நினைவில் வைத்திருப்பேன் சார்.
கடந்த 29 வருடங்களாக அன்பு சிறிதும் குறையாமல் என்னை இந்த மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக அந்த அன்பை இன்றளவும் பின்பற்றி வருகிறீர்கள். 5,000 பேரை வைத்து ஒரு ரத்த தான முகாம் ஆரம்பித்தோம். “நீங்கள் ரத்தம் கொடுத்தால் உங்களுடன் புகைப்படம் எடுக்கிறேன்” என்று சொன்னேன்.
அப்படித் தொடங்கிய அந்த இயக்கம், இப்போது வருடத்திற்கு 5,000 பேர் ரத்த தானம் செய்யும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.
நானும் ஜோதிகாவும் ‘ரோமஞ்சம்’ திரைப்படம் பார்த்தபோது விழுந்து விழுந்து சிரித்தோம். ஜித்து மாதவனின் ‘ஆவேசம்’ படமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜித்து ஒரு உலகத்தை உருவாக்கினார் என்றால், அது ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
அவர் இங்கு வந்து நேரடித் தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன்; அது உடனடியாகச் சாத்தியமானது. நஸ்ரியா 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார். நஸ்ரியா எப்போது நடிக்கிறார் என்றே தெரியாது! வசனங்கள் ஏதுமின்றித் தனது சின்னச் சின்ன பாவனைகள் மூலமாகவே நகைச்சுவையை வரவழைத்து விடுவார்.
அதனால் ‘மாயா’ என்ற கதாபாத்திரத்திற்கு நஸ்ரியாதான் சரியான தேர்வு. நஸ்லென், ‘லோக்கா’ படத்தில் பிணத்தைப் பார்த்துப் பயந்து விழுந்தவர், இதில் பிணத்தை வைத்து ஆராய்ச்சியே செய்து கொண்டிருப்பார்! ‘ழகரம்’ நிறுவனம் மூலமாகத் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமாவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழிலும் அழகாக டப்பிங் பேசியிருக்கிறார். இத்திரைப்படம் உங்களுக்கு நிச்சயமாக ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன். கொலை, மர்மம், சைக்கோத்தனம் மற்றும் நகைச்சுவை நிறைந்த ஒரு சுவாரஸ்யமான கதைக்களமாக இது இருக்கும்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக திரையரங்கிற்கு வந்து பார்த்துவிட்டு, மகிழ்ச்சியாகத் திரும்பிச் செல்லலாம். இந்தத் தீபாவளி உங்களுக்கு ஒரு அழகான தீபாவளியாக அமையும்.
இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், உங்களின் ஆற்றலின் மிகச்சிறந்த வடிவமாக இப்படத்தின் இசை அமைந்திருக்கிறது. இறுதியாக, நடிகர் தனுஷ் அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள். ஏனெனில், நம்ம படம் தீபாவளிக்கு வருவதால், தனது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அவரே ட்வீட் செய்து வாழ்த்தியிருந்தார். அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்!”
சூர்யா – ஜோதிகாவால் கார்த்திக்கு மனைவியிடம் செம அடி.. வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இருக்காம்
November 1, 2026
தனுஷ் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கல.. ஆனாலும், நன்றி சொன்ன சூர்யா.. குவியும் கமெண்ட்ஸ்
November 1, 2026
தனுஷூடன் காரில் இருந்த பெண் யார்? கேமராவை பார்த்ததும் முகத்தை மூடியது ஏன்?
November 1, 2026
Aishwarya Rai Birthday – ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்.. மேடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
November 1, 2026
Akka Review: பட்டாடை பெண்களின் இரத்தக்களறி.. கீர்த்தி சுரேஷ் Vs ராதிகா ஆப்தே.. அக்கா வெப் சீரிஸ்!
November 1, 2026
Woman with disability dies in midnight fire at Korattur apartment
November 1, 2026
சூர்யா – ஜோதிகாவால் கார்த்திக்கு மனைவியிடம் செம அடி.. வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இருக்காம்
November 1, 2026
தனுஷ் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கல.. ஆனாலும், நன்றி சொன்ன சூர்யா.. குவியும் கமெண்ட்ஸ்
November 1, 2026
தனுஷூடன் காரில் இருந்த பெண் யார்? கேமராவை பார்த்ததும் முகத்தை மூடியது ஏன்?
November 1, 2026
Aishwarya Rai Birthday – ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள்.. மேடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
November 1, 2026