கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இது தொகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.எஸ்.பாபு தோற்கடித்திருந்தார். இதனால் தமிழகம் முழுவதுமே கவனிக்கப்படக் கூடிய எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு மாறினார்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைந்தக்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், மருத்துவமனை தரப்பில் அவருக்கு சுவாசக்கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியானது. அடுத்த சில நாட்களிலேயே அவரிடன் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அறிக்கை கொடுக்கப்பட்டது.

கடைசியாக செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனை தரப்பிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதன்பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அப்டேட்டும் இல்லை. இடையில் முதல்வர் விஜய் ஒரு முறை வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார். அமைச்சர்கள் அருண்ராஜ், வெங்கட்ரமணன் போன்றோரும் மருத்துவமனைக்கு சென்று வந்தனர். சமீபத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர், ‘நான் வி.எஸ்.பாபுவிடம் போனில் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார்’ என்றார்.
வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அதிமுக, புதிய தமிழகம் கட்சியினர் போன்றோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் காலத்தில் தங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் தெரியாமல் கொளத்தூர் மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
The Best Airbnbs in Colorado, Including a Ski-In Chalet and a Cliffside Cabin
November 4, 2026
Qualcomm is betting big on data centers as smartphone sales sink
November 4, 2026
Donna Kelce On Staying Married: she stayed together for the kids; and juggled being a major breadwinner
November 4, 2026
10 Magical Christmas Traditions Around the World
November 4, 2026
This Train Offers a Front-Row Seat to One of Colorado’s Greatest Natural Wonders
November 4, 2026
WWE Crown Jewel 2026: Guide lists timings and streaming; Sami Zayn vs Roman Reigns headlines
November 4, 2026