நேற்று (அக்டோபர் 30), மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் மேற்கொண்டார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
தரிசனத்திற்குப் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் இரண்டு முறை அடுத்தடுத்து மின்சாரம் தடைப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார்.
நிர்மல் குமார், “மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மாலை 5:35 மணிக்கு வருகை தந்தார்.
தரிசனம் முடிந்த பிறகு மாலை 6:25 மணிக்கு வெளியேறினார்.
குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி, பிற்பகல் 3:30 மணி முதல் கோயில் முழுவதும் ஜெனரேட்டர் மின்சாரம் மூலமே இயங்கியது.

ஏன் மின்வெட்டு?
இதற்கான மின்சாரப் பராமரிப்புப் பணிகள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவிச் செயற்பொறியாளர் உதவிக்காகக் கோயில் மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தார்.
தரிசனம் முடிந்த பிறகு, குடியரசுத் துணைத் தலைவர் கிழக்குக் கோபுர வாசலுக்கு எதிரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அந்தச் சமயத்தில், கோயில் மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட உள்சுற்று மின்கோளாறு (internal fault trip) காரணமாகக் கோயிலுக்குள் சிறிது நேரம் மின் விநியோகம் தடைபட்டது.
உடனடியாகச் செயல்பட்டு, அடுத்த 2 நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் மின்சாரத்திலிருந்து மின்சார வாரிய மின்சாரத்திற்குத் தொடர்பு மாற்றப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
மீண்டும்… மீண்டும்!
ஏற்கெனவே தமிழ்நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை பரவலாக இருந்து வருகிறது. இதுவரை தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று, குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட நிகழ்வில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்ததே கோபம்.. 90% இடங்களில் படுதோல்வி! உச்சக்கட்ட கோபத்தில் சொன்ன பாயிண்டு
November 6, 2026
எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி.. முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு! இந்த சான்ஸ் கிடைத்தது எப்படி?
November 6, 2026
பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள்
November 6, 2026
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் என்ன?
November 6, 2026
அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு
November 6, 2026
லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி
November 6, 2026
Rocco’s Black Friday Sale: Smart Fridges Hit Their Lowest Prices of 2026
November 6, 2026
Early Black Friday Mattress Deals: Get Up to 35% Off WIRED-Tested Favorites
November 6, 2026
Free Chinese AI Models Are Getting Scary Good at Hacking
November 6, 2026
It’s Official: Alex Cooper Moves to CAA
November 6, 2026
George R.R. Martin Tapped for Lifetime Achievement Nod at Infinity Festival (Exclusive)
November 6, 2026
‘The Bachelor’ Returns, ‘The Rookie’ Moves as ABC Sets Midseason Schedule
November 6, 2026