நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றிருந்தார். அங்கே முதல்வரிடம் மனு கொடுக்க வந்திருந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளர் கே.எம்.சரீப்பை காவல்துறையினர் தடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. சரீப் எதற்காக அடைத்து வைக்கப்பட்டார் என அவரையே தொடர்புகொண்டு பேசினோம்.

கே.எம்.சரீப் கூறியதாவது, ”முதல்வரின் நிகழ்ச்சிக்காக காவல்துறை சார்பில்தான் வி.ஐ.பி பாஸ் கொடுத்தார்கள். மதியம் 12 மணிக்குதான் நிகழ்ச்சி. ஆயினும் சீக்கிரமாக செல்ல வேண்டும் என்பதற்காக காலை 9:45 மணிக்கே கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டேன்.
அங்கேயிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் என்னுடைய பாஸை பார்த்துவிட்டு உள்ளே அனுமதிக்கவில்லை. பயனாளிகளுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பிக்களுக்கும் மட்டுமே அனுமதி எனக் கூறினார்கள். புதுக்கோட்டையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான புறம்போக்கு நிலங்கள் தனியாருக்கு முறைகேடாக பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒரு சில அரசு அலுவலர்களை மட்டும் சஸ்பெண்ட் செய்து விஷயத்தை மூடி மறைத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டுமென முதல்வருக்கு ஒரு மனுவை எழுதி வைத்திருந்தேன்.

அந்த மனுவை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் என்றேன். உடனே என்னையும் இன்னும் சிலரையும் கலெக்டர் அலுவலகத்தில் விழா நடந்த ஹாலுக்கு அருகேயே ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள். கலெக்டரிடம் பேசிவிட்டு அழைத்து செல்கிறோம் எனக் காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், எங்களை அந்த அறையிலேயே வைத்து பூட்டிவிட்டார்கள். முதல்வர் கிளம்பியவுடன் தான் அறைக்கதவை திறந்தனர். நான் புதுக்கோட்டை தொகுதியின் தவெக வேட்பாளர். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றேன். தவெகவுக்கு சங்கடம் விளைவிக்கும் வகையில் எதையும் செய்துவிடமாட்டேன். பொது பிரச்னைக்காகத்தான் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க நினைத்தேன். அதையும் அதிகாரிகள் தடுத்து விட்டார்கள். முன்னெச்சரிக்கையாக கைது செய்திருந்தால் கூட ஏற்றிருப்பேன். இப்படி கதவை மூடி அடைத்து வைத்ததை மனம் கேட்க மறுக்கிறது. வரும் நாட்களில் முதல்வரை எப்படியாவது சந்தித்து மனுவை கொடுக்க முயற்சிப்பேன்’ என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன?
November 4, 2026
தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?
November 4, 2026
பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா?
November 4, 2026
அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத் யார்?
November 4, 2026
கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன் – டிரம்ப் ஆதரித்த 'சர்ச்சை' பிரசாரத்தை மீறி வெற்றி
November 4, 2026
'48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' – கடலில் காணாமல் போன 9 காசிமேடு மீனவர்கள் – உரிமையாளர் கூறுவது என்ன?
November 4, 2026
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன?
November 4, 2026
அண்ணனு கூப்பிடாத.. ஹீரோயின் சான்ஸ் வாங்கி தரேன் அட்ஜெஸ்ட் பண்ணு.. இளம்பெண்ணிடம் கவிதை கோபாலின் லீலை
November 4, 2026
தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?
November 4, 2026
நெப்போலியன் மகன் தனுஷ் நடிகராகிட்டாரு.. ஆசையை உடனே நிறைவேற்றிய தந்தை.. சூப்பர் குடும்பம்
November 4, 2026
பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா?
November 4, 2026
விஜய்தான் அடுத்த 20 வருஷத்துக்கு முதலமைச்சர் போல.. மடியில் குழந்தைகள் விளையாடுறாங்களே
November 4, 2026