தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா (01.11.2026) அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வன்னி அரசு, சி. விஜயலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய அமைச்சர் ராஜ் மோகன், “பெருமைமிகு இந்த மேடையில் வைத்து, முதல்வரோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைச் சொல்லப் போகிறேன். `இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்க, அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி ரூபாய் நான் தர்றேன்’ அப்படின்னு ஒருத்தரு பேசிருக்காரு…
நான் சிரிச்சுகிட்டே லயோலா மணிகிட்ட நான் சொல்லி அனுப்பினேன். ‘தம்பி, 500 கோடி கொடுத்தாலும் யாருக்கும் பொருத்தமில்லாத ஒருத்தருக்கு ஒரு பதவிகூட தளபதி தரமாட்டார். நான் தளபதியின் தம்பி. பொருத்தமுள்ள புஷ்பவனம் குப்புசாமி அண்ணனுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய் வாங்காம அந்தப் பதவியை தளபதி தரச் சொல்லியிருக்கார்’ன்னு சொல்லி அனுப்புனேன். இன்னைக்கு வரைக்கும் நான் வெளில சொன்னதில்லை அண்ணே” என்று பேசினார்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் அரசியல் அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை ஆதாரமாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற எம்.எல்.ஏ-வுமான பரந்தாமன் புகார் மனு அளித்திருக்கிறார்.
உண்மையில் அமைச்சர் ராஜ் மோகன் பேசியது சரியா? லயோலா மணி மீதும் வழக்கு தொடர முடியுமா? இதில் இருக்கும் சட்ட நடைமுறை என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அஜிதாவிடம் பேசினோம்.

அவர், “அமைச்சர் மேடையில் பேசும்போது, `அரசுப் பதவிக்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒரு நபர் முன்வந்ததாகவும், அந்தத் தகவலை பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தன்னிடம் கொண்டு வந்தபோது தான் நிராகரித்துவிட்டதாகவும்’ பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்படி லஞ்சம் வாங்குவது மட்டுமன்றி, லஞ்சம் கொடுக்க முயல்வதும் குற்றமாகும். ஆனால், குற்றம் செய்ய முயன்ற நபர் யார் என்பதை வெளிப்படுத்தாமலும், அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்காமலும் மறைத்தது குற்றத்தை மறைக்கும் செயலாக (Concealment of Crime) சட்ட ரீதியாகப் பார்க்கப்படுகிறது.
1988-ம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act, 1988) பிரிவு 8-ன் படி, ஓர் அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயல்வது அல்லது அதற்காக ஒருவரை அணுகுவது மிகக் கடுமையான குற்றமாகும். இதற்குச் சட்டத்தில் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சரை அணுகி 5 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகக் கூறிய நபர் மீது இந்தப் பிரிவின் கீழ் உடனடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்திருக்க வேண்டும்.
அமைச்சரிடம் இந்தத் தகவலைக் கொண்டு சென்ற நபர், அந்த லஞ்சப் பணத்தைப் பெறுவதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தாலோ அல்லது அதைப் பெற முயன்றிருந்தாலோ அவரும் இந்த கிரிமினல் குற்றத்திற்குள் வருவார். அல்லது லஞ்சம் கொடுக்க வந்தவரைப் பற்றிய தகவலை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைத்திருந்தாலும், காவல்துறையினர் அவரைக் கட்டாய விசாரணைக்கு உட்படுத்தி குற்றவாளியைக் கண்டறிய வேண்டும்.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், லயோலா மணியே லஞ்சம் கொடுப்பதாகச் சொன்னவர் மீது புகார் பதிவு செய்திருக்க வேண்டும். அதுவே முறையானதாகும். சட்ட விதிகள் இவ்வவு தெளிவாக இருக்கும் நிலையில், இந்த ஊழல் முயற்சி குறித்துக் காவல்துறை ஏன் இன்னும் வழக்குப்பதிவு (FIR) செய்யவில்லை? என்பதே சட்டப் ரீதியாக எழுப்பப்பட வேண்டிய முதன்மையான கேள்வி.
அரசும் அமைச்சர்களும் தங்களை ஊழலற்ற ‘மிஸ்டர் கிளீன்’களாக மக்கள் மத்தியில் பறைசாற்றிக் கொள்ளவே இது போன்ற சம்பவங்களை மேடைகளில் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் லஞ்ச முயற்சியை சட்ட ரீதியான நடவடிக்கையாக மாற்றாமல், வெறும் விளம்பரப் பேச்சாக மட்டுமே பயன்படுத்துவது அவர்களின் சட்ட விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் அறியாமையையே காட்டுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏற்கெனவே இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் (திமுக-வின் புகார்), லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்கிறார்களா எனப் பார்க்கலாம்.
ஒரு பொறுப்பான அமைச்சர் தன் துறை சார்ந்த சட்ட திட்டங்களையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் சரியாக அறிந்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சர்களுக்குத் தங்களின் அதிகார எல்லை, சட்ட நடைமுறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே இது போன்றப் பேச்சுகளுக்கு காரணமாக அமைகிறது.

தவெக எம்.எல்.ஏ என்.இளையராஜாவிடம் திமுக தரப்பு குதிரை பேரம் நடத்துகிறது என்றக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுத்த தவெக அரசு, நிர்வாகத்திற்கு என்று வரும்போது சட்ட ரீதியாக எப்படி யோசித்துச் செயல்பட வேண்டும் என்ற எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். கல்வித்துறை போன்ற மிக உணர்வுப்பூர்வமான ஒரு துறையின் அமைச்சர், தனக்கு வந்த லஞ்சப் புகாரை உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, அதை மேடைப் பேச்சோடு நிறுத்தியிருக்கக் கூடாது.
அரசையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டார் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பேராசிரியர் கலையரசன் போன்றோர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (Article 19) வழங்கும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்த எந்தவித புரிதலும் மரியாதையும் இல்லாமல் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு தங்களுக்கு எதிரான நகைச்சுவைக் கலைஞர்கள் அல்லது அமைப்பினர் மீது எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளைப் போலவே, மாநில அரசுகளும் காவல்துறையைத் தங்கள் அதிகார பலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

விடியற்காலையிலேயே விசாரணைக்கு அழைத்துச் சென்று நாள் முழுதும் தடுப்பில் வைக்கும் அளவிற்கு அரசுகளின் சகிப்புத்தன்மை மிகக் குறைவாக உள்ளது. தங்களுக்குச் சாதகமானவர்கள் அல்லது தங்களுக்கு வேண்டியவர்கள் லஞ்ச விவகாரங்களில் சம்பந்தப்படும்போது எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்ற முயல்கிறது. இந்த இரட்டை நிலைபாடே தற்போதைய அரசியல் சூழலின் மிகப்பெரிய முரணாக உள்ளது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் அரசின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும், அதீத எதிர்வினைகளையும் கேள்விக்குட்படுத்தி வருகின்றன” என்றார்.
US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்
November 5, 2026
இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்… விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!
November 5, 2026
6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" – சீமான்
November 5, 2026
வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி
November 5, 2026
'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' – சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!
November 5, 2026
அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம்
November 5, 2026
Cristiano Ronaldo announces retirement from international football
November 5, 2026
Serbian officers arrested for using ‘excessive force’ against protesters
November 5, 2026
‘Helpless’: The families facing winter in tents on the beach in Gaza
November 5, 2026
Congress defeat: How Trump’s allies are distancing themselves from Iran war
November 5, 2026
Madras High Court grants anticipatory bail to Chennai Press Club president, two other journalists
November 5, 2026
England’s Harry Kane extends Bayern Munich contract until 2029
November 5, 2026