கைகளில் வாள்களையும் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் “விரைவில் தலைகள் சிதறும்!” என வாள் காட்டி வன்முறை வசனம் பேசி ரீல்ஸ் மோகத்தில் திரிந்த இளைஞர்களுக்கு சிவகங்கை மாவட்டக் காவல்துறை அதிரடி காட்டியுள்ளது.

சிவகங்கையை மையமாகக் கொண்டு கடந்த சில வாரங்களாகச் சமூக வலைத்தளங்களில் கேங் வார் மோதல்களும், வன்முறையைத் தூண்டும் வகையில் ஆயுதங்களுடன் வன்முறை வசனம் பேசும் பதிவுகளும் அதிகரித்து வந்தன.

சிவகங்கை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சில இளைஞர்களும் இதில் கைகோத்துக்கொண்டு, சமூக விரோதக் கருத்துகளைப் பதிவிட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து வந்தனர்.

இதனைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் இறங்கினர். வன்முறையைத் தூண்டும் பதிவுகளை உன்னிப்பாக ஆராய்ந்து அதிரடி சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அதிரடி வேட்டையின் நிலவரப்படி

வன்முறையைத் தூண்டிய பதிவுகள் தொடர்பாக மொத்தம் 34 முதல் தகவல் அறிக்கைகள் (FIRகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாள்களைக் காட்டி வன்முறை வசனம் பேசிய சிவகங்கையைச் சேர்ந்த ரிஷி ராஜா (19), கவி சரண் (18) உள்ளிட்ட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சமூக வலைத்தள மோதல்களில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்கள் பிடிக்கப்பட்டு, இளைஞர் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறையைத் தூண்டும் வகையிலும் பழிவாங்கும் நோக்கத்துடனும் இயங்கி வந்த 210 சமூக வலைத்தளக் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கும் காவல்துறை

“சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களும் பொதுமக்களும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். லைக்ஸுக்காகவும் வியூஸுக்காகவும் சோசியல் மீடியாவில் வாளாட்டி வன்முறை வசனம் பேசினாலோ, தனிநபர்களை அச்சுறுத்தி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினாலோ பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) ஆகியவற்றின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்” எனச் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

இணையத்தில் வன்முறையைப் பரப்பி கெத்து காட்ட முயன்ற இன்ஸ்டா ரவுடிகள், தற்போது போலீசாரின் இந்த அதிரடியால் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

More in TamilNews
`லயோலா மணி புகார் கொடுத்திருக்கணும்; அமைச்சருக்கே விழிப்புணர்வு இல்லையா?'- வழக்கறிஞர் சொல்வது என்ன? November 5, 2026 US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ் US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ் November 5, 2026 இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்… விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்! இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்… விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்! November 5, 2026 6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" – சீமான் 6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" – சீமான் November 5, 2026 'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' – சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது! 'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' – சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது! November 5, 2026 அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம் அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம் November 5, 2026

See all 604 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *