பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி…

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் எண்பதுகளில் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., உடன் ஆடிய நடிகை மெட்டா ரூங்ராட். தாய்லாந்தைச் சேர்ந்த இவர், அங்கு பிரபலமான நடிகை. சுமார் 200 படங்களில் நடித்துள்ளார்.

மெட்டா

தாய்லாந்தின் தங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவரை, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்ததையடுத்து அங்கு புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் ஒருவர் படத்திலிருந்தால் நன்றாக இருக்குமென நினைத்து அவரை கமிட் செய்தாராம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கிய இந்தப் படத்தில் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆரை `கனவு நாயகனாக’ நினைத்தபடி நடனம் ஆடுவார் மெட்டா.

உலகம் சுற்றும் வாலிபன்…!

தற்போது 83 வயதான மெட்டா தாய்லாந்தில் வசித்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாகப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

சிகிச்சைகள் எடுத்து வந்தபோதும் பிரச்னைகள் தீராததால், மனம் நொந்தவராய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

தாய்லாந்து போலீஸார் மெட்டாவின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

More in Cinema
விஜய் – திரிஷா ஜோடியாக திருமணத்தில் பங்கேற்பு.. எவ்வளவு சொல்லியும் மாறவில்லையா? விஜய் – திரிஷா ஜோடியாக திருமணத்தில் பங்கேற்பு.. எவ்வளவு சொல்லியும் மாறவில்லையா? November 5, 2026 அதிகாலை 6 மணி காட்சிக்கு எதிர்ப்பு.. காரணம் தெரியாம பேசாதீங்க சீமான்.. தயாரிப்பாளர்கள் சங்கம் பதில்! அதிகாலை 6 மணி காட்சிக்கு எதிர்ப்பு.. காரணம் தெரியாம பேசாதீங்க சீமான்.. தயாரிப்பாளர்கள் சங்கம் பதில்! November 5, 2026 திரிஷாவைவிட சூப்பராக நாய் வளர்க்கும் இயக்குநர் இரா.சரவணன்.. மனம் உருகிட்டாரே பாஸ்! திரிஷாவைவிட சூப்பராக நாய் வளர்க்கும் இயக்குநர் இரா.சரவணன்.. மனம் உருகிட்டாரே பாஸ்! November 5, 2026 நம்பர் நடிகைக்கு பெரிய மச்சம் தான்.. பாவம் பிரைட் நடிகர்.. இந்த முறை பலத்த அடி கன்ஃபார்மா? நம்பர் நடிகைக்கு பெரிய மச்சம் தான்.. பாவம் பிரைட் நடிகர்.. இந்த முறை பலத்த அடி கன்ஃபார்மா? November 5, 2026 Arasan Promo: தீபாவளிக்கு வெளியாக வேண்டிய முன்னோட்ட வீடியோ தள்ளிப்போகிறதா? காரணம் இதுதான்! Arasan Promo: தீபாவளிக்கு வெளியாக வேண்டிய முன்னோட்ட வீடியோ தள்ளிப்போகிறதா? காரணம் இதுதான்! November 5, 2026 "'நூறு சாமி'-ஐ 'பூ' படம் போல பேசப்படும் படமாக மாற்றி இருக்க முடியும்; ஆனால்.."- இயக்குநர் சசி பேட்டி "'நூறு சாமி'-ஐ 'பூ' படம் போல பேசப்படும் படமாக மாற்றி இருக்க முடியும்; ஆனால்.."- இயக்குநர் சசி பேட்டி November 5, 2026

See all 204 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *