ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளான கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் சனிக்கிழமை மாலை பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கெஷ்ம் தீவிலும், ஓமன் வளைகுடாவிற்கு அருகில் உள்ள ஜாஸ்க் துறைமுகப் பகுதியிலும் அடர்ந்த புகையும் தீப்பற்றி எரிவதும் தென்பட்டுள்ளன. ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் ‘இர்னா’ (IRNA) செய்தி நிறுவனம் ஆகியவை கெஷ்ம் தீவின் கிழக்குப் பகுதியில் இரு வெடிப்புகள் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

ஹர்முஸ்
ஹர்முஸ்

அதேபோல, தென்கிழக்கு ஈரானின் கடலோர நகரமான ஜாஸ்கிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில், ஹர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதற்கான ஈரானிய ராணுவப் பயிற்சிகளின் சப்தமாக இருக்கலாம் என ஈரானிய அரசுத் தொலைக்காட்சி நிருபர் ஊகித்து செய்தி வெளியிட்டார்.

எனினும், ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்க விமானங்கள் மீது அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவில் புதிதாக அமைக்கப்பட்ட ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பைக் குறிவைத்து சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி அதை அழித்ததாக அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். கெஷ்ம் தீவானது ராடார் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஈரான் பயன்படுத்தும் முதன்மையான இடமாகும். அதேவேளையில், ஜாஸ்க் பகுதி ஈரானிய கடற்படை தளமாகவும், ஹர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தாமல் நேரடியாக எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்காக அமைக்கப்பட்ட 1,000 கி.மீ தூர ‘கோரே-ஜாஸ்க்’ (Goreh–Jask) குழாய்த்தொடரின் இறுதி முனையமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் இவ்விரு பகுதிகளும் ராணுவ ரீதியாக மிகவும் முக்கியமானவை.

அமெரிக்கா, ஈரான்
அமெரிக்கா, ஈரான்

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பற்ற பகுதியில் சென்ற இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடல் கண்ணிவெடியில் சிக்கி சேதமடைந்ததாக ஈரானிய கடற்படை தெரிவித்துள்ளது. மற்றொரு நிகழ்வாக, ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ‘M/V Huda’ என்ற வணிகக் கப்பல் மீது, அமெரிக்க மத்திய கட்டளையக வான்படைகள் மூலம் துல்லியத் தாக்குதல் நடத்தி அக்கப்பலை முடக்கியுள்ளது. இந்தச் சூழல்களால் மீண்டும் ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வடகோவை ரவுண்டானா; கோவை தீபாவளி கொண்டாட்டம்! – பருந்து பார்வை க்ளிக்ஸ் வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வடகோவை ரவுண்டானா; கோவை தீபாவளி கொண்டாட்டம்! – பருந்து பார்வை க்ளிக்ஸ் November 8, 2026 190 குழந்தைகளின் மரணம்… மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை! 190 குழந்தைகளின் மரணம்… மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை! November 8, 2026 இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு! இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு! November 8, 2026 பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கலப்பட இனிப்புகளால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கலப்பட இனிப்புகளால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் November 8, 2026 எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம்: தீபாவளி வழக்கங்களுக்கு நீத்தார் சடங்குகளுடன் என்ன தொடர்பு? எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம்: தீபாவளி வழக்கங்களுக்கு நீத்தார் சடங்குகளுடன் என்ன தொடர்பு? November 8, 2026 மொத்தம் 6 டார்க்கெட்.. சவுதியின் இதயத்தில் விழும் அடி.. ருத்ரதாண்டவமாடும் ஹவுதிகள்! பதற்றம் மொத்தம் 6 டார்க்கெட்.. சவுதியின் இதயத்தில் விழும் அடி.. ருத்ரதாண்டவமாடும் ஹவுதிகள்! பதற்றம் November 7, 2026

See all 620 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *