இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கு காடி ஐசென்காடுக்கு (Gadi Eisenkot) அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்திருக்கிறார். இது நெதன்யாகுவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்களில் ஆட்சி அமைப்பதற்கு 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலுக்குப் பின்பு காடி ஐசென்காட்க்கு 67 உறுப்பினர்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

அதேவேளையில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சிக்கு 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
7 உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகித்துள்ளனர். அதிபர் மாளிகையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வைத் தொடர்ந்து, காடி ஐசென்காட்க்கு கூட்டணி ஆட்சியை அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். மேலும் 14 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படலாம்.

குறிப்பிட்ட 6 வார அவகாசத்திற்குள் அவரால் அறுதிப் பெரும்பான்மையுடன் கூட்டணியை உருவாக்க முடியாவிட்டால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மீண்டும் மற்றொரு தலைவருக்குச் செல்லும் அல்லது இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலைச் சந்திக்க நேரிடும். இஸ்ரேலின் ராணுவப் படைத் தலைவராகப் பணியாற்றிய காடி ஐசென்காட், நெதன்யாகுவின் போர்க்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் – அமெரிக்கா: `அதிகரிக்கும் பதற்றம்: தொடர்ந்து கேட்கும் வெடிகுண்டுச் சத்தம்' – என்ன நடக்கிறது?
November 8, 2026
வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வடகோவை ரவுண்டானா; கோவை தீபாவளி கொண்டாட்டம்! – பருந்து பார்வை க்ளிக்ஸ்
November 8, 2026
190 குழந்தைகளின் மரணம்… மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை!
November 8, 2026
பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கலப்பட இனிப்புகளால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள்
November 8, 2026
எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம்: தீபாவளி வழக்கங்களுக்கு நீத்தார் சடங்குகளுடன் என்ன தொடர்பு?
November 8, 2026
மொத்தம் 6 டார்க்கெட்.. சவுதியின் இதயத்தில் விழும் அடி.. ருத்ரதாண்டவமாடும் ஹவுதிகள்! பதற்றம்
November 7, 2026
Surat businessman’s Diwali bonus wins hearts, hands employees over ₹1 lakh in cash. Watch
November 8, 2026
Oil India Limited In Assam Suspends 4 Officials After 3 Killed In Fire
November 8, 2026
4 Killed As Car Rams Bridge On Surat-Chennai Expressway In Karnataka
November 8, 2026