இந்தியாவில் எரிபொருள் பிரச்னை ஏற்பட்டதிலிருந்து, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகம் செய்யும் நடைமுறை நம் நாட்டிற்குள் வந்துள்ளது.

ஆனால், பெட்ரோலில் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக எத்தனால் கலந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

“E20 இப்போது 420 ஆக மாறிவிட்டது – பொதுமக்கள் காரிலிருந்து பெட்ரோலைத் திருடும் வேலை!

மோடி அரசு சொல்கிறது — பெட்ரோலில் 20% எத்தனால் கலந்துள்ளது என்று. ஆனால், கர்நாடக அரசு 7 மாவட்டங்களிலிருந்து பெட்ரோல் மாதிரிகளை எடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை செய்து பார்த்தது.

பெட்ரோல் + E20
பெட்ரோல் + E20

ஆய்வு முடிவுகள்…

அதன் முடிவுகளைப் பாருங்கள்: 14 மாதிரிகளில் 11-இல் 20%-க்கு அதிகமான எத்தனால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

IOCL-இல் 31.2%, HPCL-இல் 30.5% எத்தனால்!

IOCL, HPCL, BPCL, நயாரா (Nayara), ஷெல் (Shell) — அரசு நிறுவனமோ அல்லது தனியார் நிறுவனமோ, எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி கலப்படம் செய்துள்ளன.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த நிறுவனங்களின் சொந்த ஆய்வகங்கள் பெட்ரோலில் எவ்வளவு எத்தனால் கலந்துள்ளது என்ற விவரத்தையே அறிக்கையில் சொல்லவில்லை!

ஆசையாக வாங்கிய கார்… 

அதாவது, நீங்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறீர்கள், ஆனால் உங்கள் வண்டியின் டேங்கில் எத்தனால்தான் நிரப்பப்படுகிறது. இதில் நஷ்டம் யாருக்கு? உங்களுக்குத்தான்.

இவ்வளவு அதிக எத்தனாலைத் தாங்கும் வகையில் உங்கள் வாகனம் தயாரிக்கப்படவில்லை — இதனால் மைலேஜ் குறையும், அடிக்கடி மெக்கானிக் கடைக்கு அலைய வேண்டி வரும். நீங்கள் ஆசையாக வாங்கிய காரை இந்த பெட்ரோல் பாழ்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, பங்கில் உங்கள் வண்டியில் என்ன ஊற்றுகிறார்கள் என்று சொல்லும் மாதிரி எந்தவொரு லேபிளும் இல்லை. மக்களுக்கு எந்தவொரு தேர்வும் வழங்கப்படவில்லை.

உண்மையில் பயன்பெறுவது யார்?

மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் சொல்லுங்கள் — இந்த நாட்டின் டேங்கில் என்ன ஊத்தப்படுகிறது? பெட்ரோலில் உண்மையிலேயே எவ்வளவு எத்தனால் கலந்துள்ளது?

20%-க்கு அதிகமாக எத்தனால் கலக்கும் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?

எங்களது விவாத சவால் இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. இந்த விஷயத்தையும் அதில் சேர்த்துக்கொள்வோம் — உங்களது இந்தக் கொள்கைகளால் உண்மையில் பயன்பெறுவது யார்?”

More in TamilNews
பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! November 9, 2026 டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! November 9, 2026 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! November 9, 2026 “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! November 9, 2026 தீபாவளி ஓவர்.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் தீபாவளி ஓவர்.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் November 9, 2026 நைட்டு பேய் மழை இருக்கு! கோயம்புத்தூர் தொடங்கி கன்னியாகுமரி வரை.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! நைட்டு பேய் மழை இருக்கு! கோயம்புத்தூர் தொடங்கி கன்னியாகுமரி வரை.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! November 9, 2026

See all 650 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *