அமெரிக்க மக்கள் ஈரான் போரில் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாகவே, நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதனால், ‘நவம்பர் 3-ம் தேதிக்குப் பின்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்திருந்த தேதிக்குப் பின் கூட, ட்ரம்ப் தாக்குதல் எதையும் ஆரம்பிக்கவில்லை.

நேற்று CNN நேர்காணலில் பேசும்போது ட்ரம்ப், “தாக்குதல் ஈரானுடன் ஏற்படும் ஒப்பந்தத்தையடுத்து முடிவாகும்” என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஈரானின் நிலைப்பாடு

ஈரானின் தற்போதைய நிலைப்பாடு குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்க வாக்காளர்கள் தங்களுக்கான முடிவை எடுத்துவிட்டார்கள்.

இனி வெள்ளை மாளிகை தனது முடிவை எடுக்க வேண்டிய நேரம்.

நாங்கள் முன்வைத்த 2 நாள் திட்டம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது:

அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட எங்களது நிபந்தனைகளை நிறைவேற்றுங்கள். அதன் நேர்மறையான முடிவுகளை நீங்கள் காண்பீர்கள்.

அல்லது போரையே தேர்ந்தெடுக்க விரும்பினால், விழிப்புடனும் போர் அனுபவத்துடனும் காத்திருக்கும் எங்களது போர்வீரர்கள் உங்கள் மீது நரகத்தை இறக்குவதையும் பாருங்கள்.” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலைச்‌ சாடி… 

இன்னொரு பதிவில் அமெரிக்காவை ஈரான் போரில் இஸ்ரேல் இழுத்து விட்டதைச் சாடி, “அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினர் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீது கடுமையான அருவருப்பும் அதிருப்தியும் அடைந்துள்ளதை அமெரிக்க அதிபர் தெளிவாக உணர்ந்துள்ளார்.

ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, மக்கள் ஏன் அப்படி நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் புரியாமல் அவர் குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது.

அமெரிக்காவைத் தங்களின் முடிவில்லாப் போர்களில் அமெரிக்க நிர்வாகங்களை ஏமாற்றி இழுத்துவிடுவதைப் பார்த்து அமெரிக்க மக்கள் முற்றிலும் சலித்துப்போய் அலுத்துவிட்டார்கள்.

அவர்கள் பொறுத்தது போதும் என்ற அளவுக்கு வந்துவிட்டார்கள். அதேபோல்தான் நமது பிராந்தியமும்” என்று பதிவிட்டுள்ளார் அப்பாஸ் அராக்சி.

See all 588 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *