காவல் அதிகாரியாக இருக்கும் தந்தையின் கண்டிப்பாலும், அவர் செய்யும் கேலியாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார் சந்துரு (அர்ஜுன் தாஸ்). பிறகு, வளர்ந்து அவரைப் போலவே காவல் அதிகாரியாக கேரளாவில் பணியில் அமர்கிறார். ஒரு நாள் செக் போஸ்ட் டியூட்டியைக் கவனித்துக்கொண்டிருக்கும் சந்துரு, தவறுதலாக ஒரு வாகனத்தைச் சோதனை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறார். அந்த வாகனம் சிறிது நேரத்தில் நேரடியாக ஓர் ஏரிக்குள் போய் விழுந்து விபத்தாகிறது. அந்த விபத்தில் சிறுவன் ஒருவன் இறந்துபோகிறான். இது விபத்தா அல்லது கொலையா, இதனைச் செய்தது யார், அதற்குப் பின்னிருக்கும் கதை என்ன என்பதை விசாரிக்கத் தொடங்குகிறார். மறுபுறம், குறிஞ்சிமேடு என்ற தமிழக கிராமத்தில் சிறுவன் ஒருவன் காணாமல் போகிறான். அந்த வழக்கை விசாரிக்கிறார் அந்த ஊர் காவல் அதிகாரியான ராவ் (சஞ்சனா). இந்த இரண்டு வழக்குகளும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருக்கின்றன என்பதே இயக்குநர் மதுமிதாவின் இந்த ‘ஜான் டோ’.

John Doe Review | ஜான் டோ விமர்சனம்
John Doe Review | ஜான் டோ விமர்சனம்

காவல் அதிகாரி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் மிடுக்கான தோற்றத்தில் அர்ஜுன் தாஸ். படபடப்பு, இறுக்கமான முகம், நைச்சியமாகப் பேசும் விதம் போன்றவற்றை வைத்து விசாரணையை நகர்த்தியிருக்கிறார். கறார் முகம் அதிகமாகவும், மென்மையான பேச்சு குறைவாகவும் இருக்கும் கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் தேவையான மிரட்டலைத் தந்து போகிறார். சோர்வும், கவலையும் நிறைந்தவராக சாரா வினீத் அக்கதாபாத்திரத்திற்குத் தேவையான மீட்டரை எட்டிப் பிடித்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் அவரின் நடிப்பு கொஞ்சம் செயற்கையாவதால் துருத்தலாகத் தெரிகிறது. இவர்களைத் தாண்டி, அனுபமா குமார், சிருஷ்டி, ஜெயபிரகாஷ் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

க்ளோஸ் அப் ஷாட்கள், நீருக்கடியில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் எனத் த்ரில்லர் சினிமாவுக்கே உரித்தான விஷயங்களைக் கொண்டு வந்து, த்ரில் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன். இரண்டு வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதையைக் குழப்பமில்லாமல் படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் நேர்த்தியாகக் கோத்த விதம் கவனிக்க வைக்கிறது. ‘நான் போதுமா’ பாடல் மூலம் விசாரணையை முடுக்கிவிடும் இசையமைப்பாளர் முஜீப் மஜீத், பின்னணி இசையில் கொஞ்சம் சைலண்டாகி விடுகிறார். சிங்க் சவுண்டிற்காக உழைத்த படக்குழுவும் கச்சிதமான பணியைச் செய்திருக்கிறார்கள்.

John Doe Review | ஜான் டோ விமர்சனம்
John Doe Review | ஜான் டோ விமர்சனம்

சிறுவனின் மரணம், அவன் யாரென்று தேடும் படலம், அதன் மூலம் தெரியவரும் உண்மைகள் என ‘போலீஸ் – கில்லர்’ லைனில் நகர்கிறது இந்த ‘ஜான் டோ’. சந்துரு கதாபாத்திரத்தின் குழந்தைப் பருவம், தந்தையின் கண்டிப்பும், மூர்க்க குணமும் சந்துருவுக்கு மனதளவில் ஏற்படுத்தும் பாதிப்பு, தந்தையின் குரல் இவருக்கு உண்டாக்கும் அதிர்ச்சி என முன்னோட்ட எபிசோடு கதைக்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறது. ஒரு சிறுவனின் மரணத்திலிருந்து விசாரணையைத் துவக்கி வைக்கிறது திரைக்கதை. ஆனால், இதற்குப் பிறகான விசாரணைப் பகுதி தட்டையாகவே நகர்கிறது.

கொஞ்சம் தடுமாற்றத்துடன் த்ரில்லர் உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் இப்படம், இடைவேளைக் காட்சியில் வரும் அந்த எதிர்பாராத ட்விஸ்ட் மூலம் கொஞ்சம் நிமிர்கிறது. முதல் பாதியில் திரட்டிய தகவல்கள் மூலம் இரண்டாம் பாதியில் வெவ்வேறு புள்ளிகளை இணைக்கும் காட்சிகளும் சுவாரசிய கோப்பு! இதன் பிறகு, ஹீரோ – வில்லன் கண்ணாமூச்சி ஆட்டம், வில்லனைக் கண்டுபிடிக்க ஹீரோ மேற்கொள்ளும் விஷயங்கள் போன்ற எபிசோடுகளில் பெரிய சர்ப்ரைஸ்கள் இல்லை. இறுதியில், விவரிக்கப்படும் வில்லனின் கதை மட்டும் புதுசு! ஆனால், லாஜிக்?!

முந்தைய காட்சிகளில் வில்லனைப் பற்றிய சிறு சிறு விவரிப்புகளைத் துருத்தலில்லாமல் நம் கவனத்தில் ஏற்றியதும், க்ளைமாக்ஸில் அதன் முழுமையான விளக்கத்தைச் சொல்லி இணைத்ததும் நல்லதொரு யுக்தி. ஆனால், திரைக்கதையில் ஆங்காங்கே காலக்கோடு குழப்பங்கள் வருவதைக் கவனித்து அதை இன்னுமே தெளிவுபடுத்தியிருக்கலாம்.

John Doe Review | ஜான் டோ விமர்சனம்
John Doe Review | ஜான் டோ விமர்சனம்

சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் டெம்ப்ளேட்டில், சில இடங்கள் நம்மை சர்ப்ரைஸ் செய்கின்றன. ஆனால் போட்ட முடிச்சுகளை லாஜிக்குடன் அவிழ்த்திருந்தால் இந்த `ஜான் டோ’ இன்னும் நல்ல பெயர் வாங்கியிருப்பான்.

See all 162 in Cinema →

Latest News
பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன? பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன? November 15, 2026 விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ் விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ் November 15, 2026 சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை! சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை! November 15, 2026 "நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை "நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை November 15, 2026 உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்! உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்! November 15, 2026 பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது! பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது! November 15, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *