சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், ” ‘பெரியார் அறிவுலகம்’ என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் போலிப் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கின்றன.

அந்தத் தவறுகளால் ஏற்பட்ட பாவமெல்லாம் கழிய வேண்டுமென்றால், ‘மகாபெரியவா’ புத்தகத்தின் அனைத்துத் தொகுதிகளையும், அனைத்துப் பெரியார் அறிவுலக நூலகங்களின் அடுக்குகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் இந்தப் பாவமெல்லாம் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்” என்று பேசியிருந்தார்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்

நீதிபதியின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் விவாதமானது. இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “”பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் “மகா பெரியவர்கள்” என்று விமர்சித்திருந்தார்.

எம்.பி சு.வெங்கடேசன்
எம்.பி சு.வெங்கடேசன்

இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், “நகைச்சுவையாக நான் கூறிய விசயத்திற்கு என் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். நான் ரயில் நிலையம் செல்லும்போது உயர் ரக காரில் ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். யாரோ என நினைத்தபோது சு.வெங்கடேசன் உயர் ரக காரில் ஆடம்பர உடையில் இறங்கினார். ரயிலில் சு.வெங்கடேசன் முதல் வகுப்புக்குச் செல்ல, நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன்” என்று சு. வெங்கடேசனை விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல் 'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல் November 16, 2026 சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்! சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்! November 16, 2026 தள்ளி நிற்கும் இந்தியா! COP31 காலநிலை மாநாட்டில்.. முக்கிய இலக்கு! நிறைவேற்றுவதில் சிக்கல்? தள்ளி நிற்கும் இந்தியா! COP31 காலநிலை மாநாட்டில்.. முக்கிய இலக்கு! நிறைவேற்றுவதில் சிக்கல்? November 16, 2026 அரிய கனிமங்கள்.. அபரிமிதமான பணம் பார்க்கும் சீனா! லாபம் மட்டும் எவ்வளவுனு பாருங்க அரிய கனிமங்கள்.. அபரிமிதமான பணம் பார்க்கும் சீனா! லாபம் மட்டும் எவ்வளவுனு பாருங்க November 16, 2026 டிரம்ப், புதின் சந்திப்பில் என்ன பேசப்படும்? வேறு லைனில் போகும் சீன அதிபர்! விஷயம் கொஞ்சம் சீரியஸ்! டிரம்ப், புதின் சந்திப்பில் என்ன பேசப்படும்? வேறு லைனில் போகும் சீன அதிபர்! விஷயம் கொஞ்சம் சீரியஸ்! November 16, 2026 "குடும்ப சொத்தில் எனக்கு 50% வேண்டும்.." ரூ.2.43 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் சொத்து தகராறு "குடும்ப சொத்தில் எனக்கு 50% வேண்டும்.." ரூ.2.43 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் சொத்து தகராறு November 16, 2026

See all 778 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *