சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பழங்குடி மாணவர்களுடன் உட்கார்ந்து உணவும் சாப்பிட்டிருக்கிறார்.

அதேவேளையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வனத்துறையினருடன் சென்ற அமைச்சர் வன்னி அரசு, அது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் ரீல்ஸாக பகிர்ந்திருக்கிறார். புலிகள் நடமாடும் காட்டில் புலியை விரட்டிச் செல்வது போன்று ரீல்ஸில் இடம்பெற்றிருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் வன்னி அரசு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஊட்டி சாதிக் மற்றும் குழுவினர், ” தமிழ்நாடு வனத்துறை விதிகளின்படி, சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை நெருங்கவோ அல்லது சஃபாரி வாகனங்களிலிருந்து கீழே இறங்கவோ கூடாது. ஆனால், அமைச்சர் வன்னி அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வனத்துறையின் சட்டதிட்டங்களை மீறியிருக்கிறார்.

வனத்துறையின் கட்டுப்பாடுகளை ஒரு அமைச்சரே மீறுவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. 1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் வனவிலங்குகளை நெருங்குவதைத் தடுக்கத் தவறியதற்காக அமைச்சருடன் சென்ற வனத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முதுமலை புலிகள் காப்பகம் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், அரசியல் பதவி, செல்வாக்கு அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் பொருந்தக்கூடிய வனத்துறை விதிமுறைகளையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் மதிக்க வேண்டும்.

அமைச்சர் வன்னி அரசு பதிவிட்ட புலி

வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து, இயற்கைச் சூழலின் சமநிலையைப் பாதுகாப்பதே இத்தகைய விதிமுறைகளின் முக்கிய நோக்கமாகும். சாதாரணக் குடிமக்கள் சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொது அதிகாரத்தில் இருப்பவர்களும் அதைவிட உயர்ந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்”என்றனர்.

இது குறித்து அமைச்சர் வன்னிஅரசிடம் பேசினோம், ” இயற்கை மீது அதிக நேசம் கொண்டவன் நான். 10 ஆண்டுகளுக்கு மேலாக டிரெக்கிங் அனுபவம் இருக்கிறது. திடீரென புலியை பார்த்தோம். அடுத்த ஸ்பாட்டில் மீண்டும் பார்க்கலாம் என்கிற ஆவலில் தான் சென்றோம். ஆனால், பெரிய சர்ச்சை போல உருவாக்கி வைரலாக்கி வருகிறார்கள். புலியை நம்மால் விரட்ட முடியுமா?” என்றார்.

More in TamilNews
'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல் 'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல் November 16, 2026 சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்! சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்! November 16, 2026 தள்ளி நிற்கும் இந்தியா! COP31 காலநிலை மாநாட்டில்.. முக்கிய இலக்கு! நிறைவேற்றுவதில் சிக்கல்? தள்ளி நிற்கும் இந்தியா! COP31 காலநிலை மாநாட்டில்.. முக்கிய இலக்கு! நிறைவேற்றுவதில் சிக்கல்? November 16, 2026 அரிய கனிமங்கள்.. அபரிமிதமான பணம் பார்க்கும் சீனா! லாபம் மட்டும் எவ்வளவுனு பாருங்க அரிய கனிமங்கள்.. அபரிமிதமான பணம் பார்க்கும் சீனா! லாபம் மட்டும் எவ்வளவுனு பாருங்க November 16, 2026 டிரம்ப், புதின் சந்திப்பில் என்ன பேசப்படும்? வேறு லைனில் போகும் சீன அதிபர்! விஷயம் கொஞ்சம் சீரியஸ்! டிரம்ப், புதின் சந்திப்பில் என்ன பேசப்படும்? வேறு லைனில் போகும் சீன அதிபர்! விஷயம் கொஞ்சம் சீரியஸ்! November 16, 2026 "குடும்ப சொத்தில் எனக்கு 50% வேண்டும்.." ரூ.2.43 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் சொத்து தகராறு "குடும்ப சொத்தில் எனக்கு 50% வேண்டும்.." ரூ.2.43 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் சொத்து தகராறு November 16, 2026

See all 775 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *