டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி. 4.2 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் இவர். இப்போது அவர் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

Amala Shaji
Amala Shaji

அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.

இது குறித்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “ஒரு காலத்தில் நான் கற்பனை மட்டுமே செய்து பார்த்த ஒரு கனவு, இப்போது இறுதியாக நிஜமாகிறது. எனது முதல் திரைப்படம். நான் என்றும் பொக்கிஷமாகக் கருதும் ஒரு தருணம்.

இந்த அழகான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சியும், உற்சாகமும், மிகுந்த நன்றியுணர்வும் அடைகிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி, இந்தத் தொடக்கத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய எங்களது இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும், இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு சிறிய தொடக்கம்தான், ஆனால் மிகவும் சிறந்ததாகக் கருதுகிறேன்.” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

See all 173 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *