ஒரு நிமிடமாவது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்திருப்பேன்!
“முதல்வர் பேசும் போது ஒரு மணித்துளியாவது எதிர்க்கட்சியினர் அமைதியாக இல்லை. கூச்சலும் குழப்பமும் செய்து கொண்டிருந்தனர். அவர் பேசுவாரா என்றீர்கள்…நீண்ட நெடிய பதிலுரையை அளிக்கும் போது ஒரு நிமிடமாவது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்திருப்பேன்.
என்னை நிர்பந்தப்படுத்துவதால் பேச அனுமதிக்க முடியாது.” என்றார் சபாநாயகர்.
திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணா
திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணா செய்தனர்.
“முதல்வர் பேசும்போது விதிகளை மீறி இடையில் அடிக்கடி தொல்லை செய்ததால் திமுகவினரை பேச அனுமதிக்க முடியாது” – – சபாநாயகர்
அவை காவலர்களை சபாநாயகர் அழைக்கிறார்.
தன்னை பேச அனுமதிக்க வேண்டுமென உதயநிதி கேட்கிறார்.
“உங்களின் உருட்டல் மிரட்டலுக்கு பயந்தெல்லாம் பேச அனுமதிக்க முடியாது.”
– சபாநாயகர்
கடலூர் திமுக எம்.பி ரமேஷ் விவகாரம்..!
முதல்வர் விஜய், “கடலூர் திமுக எம்.பி ரமேஷ் என்பவரின் முந்தரி தோட்டத்தில் ஒருவர் தற்கொலை செய்ததாக சொல்லப்பட்டது. பின்னர் அந்த சம்பவத்தில் மிக தாமதாக ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
இப்படி பல வழக்குகளில் திமுகவினர் மீது மிக தாமதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் புகார் வந்தவுடன் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கட்சியிலிருந்தும் நீக்கியிருக்கிறோம்.” என்றார்.
2021 இல் திமுக அரசு அமைந்தவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஏன் ரத்து செய்தனர்.!
முதல்வர் விஜய், “திட்டங்களுக்கு பெயர் மாற்றப்படுகிறது, ரத்து செய்யப்படுகிறது என திமுகவினர் கூறுகின்றனர்.
2021 இல் திமுக அரசு அமைந்தவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஏன் ரத்து செய்தனர்.
தாலிக்கு தங்கம், அம்மா இருச்சக்கர வாகனம் போன்றவற்றை ரத்து செய்தனர். மடிக்கணினி திட்டத்தை நான்கரை ஆண்டுகள் கழித்து செயல்படுத்தினர்.”
1971 இல் மதுவிலக்கை ரத்து செய்து தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழித்தது யார்?
கனிம வளங்களை கொள்ளையடித்தது யார்?
எல்லா கேள்விக்கும் பதில்…திமுக…திமுக…” என்றார்.
ஊழல் என்றவுடன் திமுகவினர் உடனே எழுந்துவிடுவார்கள்.!
முதல்வர் விஜய், “ஊழல் என்றவுடன் திமுகவினர் உடனே எழுந்துவிடுவார்கள். ஆதாரம்…ஆதாரம் என்பார்கள். ஊழல் செய்தவர்கள்தான் ஆதாரம் என்பார்கள். ஒன்றும் செய்யாதவர்கள் அமைதியாகவே இருப்பார்கள்.
அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், விஜய்.
இறைவனும் இயற்கையும் மக்களும் எப்போதும் நம் பக்கம்தான்.
நான் இந்த நாற்காலிக்காக இங்கே வரவில்லை. மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்திருக்கிறேன்.
நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன். காட்டு காட்டுன்னு சொன்னா…
எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் பொறுப்பற்று பேசுவது சரியாக இருக்காது. உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கிட்டு பேசுவது தலைமைக்கு அழகல்ல.
கூட்டுப் பொறுப்பை உணர்ந்து சக அமைச்சர்கள் பதில் கூறுகின்றனர்.” என்றார்,
நம் அரசு வந்தவுடன் ரத்தீஸ் ஏன் துபாயில் போய் ஒளிந்திருக்கிறார்?

முதல்வர் விஜய், “ஐ.ஏ.எஸ் ஆபிசர்கள் பெயரும் டாஸ்மாக் விவகாரத்தில் அடிபடுகிறது. ரத்தீஸ் என்பவரின் பெயரும் அதில் அடிபடுகிறது. ரத்தீஸின் சொல்படிதான் ஐ.ஏ.எஸ் அதிகாரி செயல்பட்டார் என அமலாக்கத்துறை கூறுகிறது. அவரை பவர் ப்ரோக்கர் என்கிறார்கள். நம் அரசு வந்தவுடன் ரத்தீஸ் ஏன் துபாயில் போய் ஒளிந்திருக்கிறார்?
பார் ஓனர்களிடமிருந்து பார்ட்டி பண்ட் வாங்கியிருக்கின்றனர். அவர்களை கரூர் கேங் என அமலாக்கத்துறை கூறுகிறது.
Malpractice, Fraud, Abusing Power, Karur Gang, Corrupt… இந்த வார்த்தைகளைத்தான் திமுகவை பற்றி அமலாக்கத்துறை குறிப்பிடுகிறது.
திமுக இருக்கிற இடத்துலதான் தப்பு நடக்கும். தப்பு நடக்குற இடத்துலதான் திமுக இருக்கும்.” என்றார்.
ஒரு சாம்பிள் பார்ப்போம்.!
முதல்வர் விஜய், “கடந்த வாரம் பேசும் போது என் டேபிளில் 3 பைல் இருக்கிறது என்றேன். அதை ஓப்பன் பண்ணுவதற்கு முன் ஒரு சாம்பிள் பார்ப்போம்.
கடந்த திமுக அரசில் அமலாக்கத்துறை அனுப்பிய கோப்பு இங்கே.
சர்காரிய கமிஷனில் இருப்பதை பார்ப்போம். வீராணம் திட்டத்தில் சத்யநாராயணா பிரதர்ஸ் ஒப்பந்தம் எடுக்க மாறன் இரண்டரை சதவீத கமிஷன் கேட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது. அந்த அறிக்கை வந்து பொன் விழாவே வந்துவிட்டது.
1970-74 வரை தவணை முறையில் 29 லட்சம் கமிஷன் வாங்கப்பட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது.
கலைஞர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. இதெல்லாம் நான் சொல்லும் குற்றம் இல்லை. அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டு.
சத்யநாராயணா பிரதர்ஸூக்கு ஒப்பந்தம் கொடுக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் பதவியை தவறாக பயன்படுத்தினார் எனக் கூறப்பட்டிருக்கிறது.
இவர்களின் அரசியல் பாரம்பரியம் பற்றி மக்களுக்கு சொல்லித்தானே ஆக வேண்டும்.
ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு திமுக சுற்றிக்கொண்டு இருக்கும். பார்ட்டி பண்ட்க்கும் ஆதாரம் பக்கத்தில்தான் இருக்கிறது.
அமலாக்கத்துறை கொடுத்த கோப்பில் பார்ட்டி பண்ட் பற்றி இருக்கிறது.
7.5% லிருந்து 10% வரை பார்ட்டி பண்ட் வாங்கியதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி பார்ட்டி பண்ட் பெயரில் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டிருக்கிறது.
பார்ட்டி பண்ட்டின் மூலம் நேரடியாக பலனடைந்தவர் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும்தான் எனக் கூறப்பட்டிருக்கிறது.
செந்தில்பாலாஜி தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் எனவும் அமலாக்கத்துறை சொல்கிறது.” என்றார்.
கண்ணதாசன் திமுகவை பற்றி சுருக்கமாக..!
முதல்வர் விஜய், “கண்ணதாசன் திமுகவை பற்றி சுருக்கமாக
`பேசிய பழகிய பொய்
வாங்கி பழகிய கை’ என்றார்.
முதல்வர் விஜய், “எனது உரையை முடிக்கும் முன் ஒரு கோரிக்கை வைக்கிறேன். கருத்துரிமை, பேச்சுரிமை என்பதை எந்தளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். இது பொதுவான கோரிக்கை தான்.
அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையோ பெண்களையோ தரம் தாழ்த்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சமீபமாக தமிழகத்தில் ஆபாசநதியாக ஓடுகிறது. வன்மநதியாக ஓடுகிறது.
பெண்களை பற்றி டபுள் மீனிங்கில் ட்ரிபிள் மீனிங்கில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
நான் இந்த இடத்தில் இருப்பதற்கு பெண்கள் தான் காரணம். பெண்களை அசிங்கமாக பேசினால் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம்.
ஜெயலலிதா மேடம் இதே அவையில் எதிர்க்கட்சியால் எப்படி அவமானப்படுத்த்தப்பட்டார் என்பது தெரியும்.
அரசியல்ரீதியாக விமர்சனங்களை வைக்கலாம். ஒரு உறுப்பினர் சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பேன் என பேசுகிறார். இப்படித்தான் பேச வேண்டுமா?
திமுகவில் இருக்கும் இன்னொரு உறுப்பினர் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்காததால் நல்ல சாவே வராது என்கிறார். மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?
ஆபாசநதி பேசியதை நாங்கள் அந்த காலத்தில் பேசாததா என நியாயப்படுக்கின்றனர்.
எது பேசினாலும் மிசாவை பார்த்தவர்கள்…மிசாவை பார்த்தவர்கள் என பேசுகிறார்கள்.
யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவர்!
முதல்வர் விஜய், “காவல் மரணங்கள் என்பது சாதாரண விஷயமல்ல. அது காவல்துறையின் மீதான நம்பிக்கை குலைக்கும். அதனால் காவல் மரணங்களின் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவறு செய்தவர் காவலராக இருப்பதாலயே அவரை காப்பாற்ற நினைக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டும். யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவர்.
காவலர்களின் பணிச்சுமையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காவல்துறையில் காலிப் பணியிடங்களை துறைவாரியாகவும் மாவட்டவாரியாகவும் நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சியினர் சிலர் எங்களை பாராட்டியிருக்கின்றனர். சிலர் எங்களை விமர்சித்திருக்கின்றனர். சிலர் ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பியிருக்கின்றனர்.
இந்த அரசு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் எந்த பாரபட்சமும் இல்லாமல் கேட்டு செயல்படுத்தும்.” என்றார்.
பெண்கள் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம்!
முதல்வர் விஜய், “போதைப்பொருளின் சில கிளைகளை உடைத்திருக்கிறோம். போதையை வேரோடு ஒழிக்க வேண்டும். அது ஒரு நாளில் நடக்காது. அதற்காக 65 போதைப் பொருள் தடுப்புப்படைகளை அமைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இரண்டு பெண் கொள்கைத் தலைவர்களை கொண்டிருக்கும் நாம் பெண்களை தாயாக சகோதரியாக பார்க்கிறோம். அவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம். அவர்களுக்கு நல்வாழ்வை அளிப்பதே எங்களின் நோக்கம்.” என்றார்.
அமுதன் கொலை பற்றி பல விஷயங்கள் பேசப்படுகிறது!
முதல்வர் விஜய், “கோயம்புத்தூரில் நடந்த அமுதன் கொலை பற்றி பல விஷயங்கள் பேசப்படுகிறது. மாணவனை இழந்து வாடும் குடும்பத்தினரின் வேதனையை புரிய முடிகிறது. அந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட 36 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
யார் மீது பழி போடலாம் என எதிர்க்கட்சிகள் நினைப்பதை போல, 2021-25 வரை நடந்த குற்றச் சம்பவங்களை டேட்டாவோடு நம்மாலும் அரசியல் செய்ய முடியும். ஆனால், அந்த கீழான அரசியல் நமக்கு வேண்டாம்.” என்றார்,

தொடர்ந்து, “ஊழலற்ற நேர்மையான அரசை வழங்குவதுதான் ஒரே நோக்கம்.
அரசு ஊழியர்களில் பலர் தங்களின் குடும்பத்தையும் மறந்து நேர்மையாக பணி செய்கின்றனர். அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
ஆனால், சிலர் சுயலாபத்துக்காக லஞ்சம் ஊழலில் ஈடுபடுகின்றனர். லஞ்சம் வாங்கி நாளிதழில் பெயர் வந்தால் தங்களின் குடும்பம் என்ன மனநிலைக்கு உள்ளாகும் என்பதை யோசித்து பார்த்து அரசு ஊழியர்கள் தவறு செய்வதை தவிர்க்க வேண்டும்.” என்றார்.
குற்றம் நிகழ்வதற்கான காரணத்தை கண்டறிந்து..!
முதல்வர் விஜய், “ஒரு தனிப்பட்ட குற்றத்தை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கோடு ஒப்பிட முடியாது. அவை குடும்பப் பிரச்னையாக இருக்கலாம். சொத்துப் பிரச்னையாக இருக்கலாம். காவல்துறையின் பணி குற்றவாளியை கைது செய்வதோடு நின்று விடக்கூடாது. குற்றம் நிகழ்வதற்கான காரணத்தை கண்டறிந்து அவை நடப்பதற்கு முன்பே தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் பணி குற்றவாளியை கைது செய்வதோடு நின்று விடக்கூடாது. குற்றம் நிகழ்வதற்கான காரணத்தை கண்டறிந்து அவை நடப்பதற்கு முன்பே தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களை தடுக்க சிறியோர் முதல் பெரியோர் வரை டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.
முதல்வர் உரை.!
முதல்வர் விஜய், “ஒரு மாநிலத்தோட முன்னேற்றம் தொழிற்சாலைகளாலும் சாலைகளாலும் மட்டும் முடிவு செய்யப்படுவதில்லை. சமூக அமைதியோடு மக்கள் நம்பிக்கையாக இருந்தாலே தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.
சட்டத்தை மதிப்பவர்களுக்கு காவலர்கள் நண்பனாகவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு காவலர்கள் எதிரியாக இருக்க வேண்டும்.
எம்.எல்.ஏ, அமைச்சர் என யாராக இருந்தாலும் காவல்துறையின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டிருக்கிறேன்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என உள் நோக்கத்தோடு விமர்சித்தாலும் அதிலும் உண்மை இருக்கிறதா என பாரபட்சம் இல்லாமல் ஆய்வு செய்வோம்.
காவல்துறை என்பது அடையாளமாக இல்லாமல் மக்கள் பாதுகாப்பின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.” என்றார்.
கூடியது சட்டப்பேரவை: பேசுவதற்கு அனுமதி கேட்டு திமுகவினர் அமளி.!

முதல்வரின் பதிலுரை இருக்கும் நிலையில் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய கடும் கூட்டம்!





சட்டமன்றம்: முதலவர் விஜய் பதிலுரை!
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துவிட்டார். இந்த நிலையில், அரசினர் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் ஆளும் அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். அதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதில் சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், தவெக அமைச்சர் ராஜ் மோகன் தன் எக்ஸ் பக்கத்தில், “எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
"ரிவர்ஸ் கியர் ஆட்சி" முதல் "பெயர் மாற்ற பட்ஜெட்" வரை…அதிர வைத்த உதயநிதியின் குற்றச்சாட்டுகள்!
September 8, 2026
மாஸ் ஸ்பீச்… குற்றச்சாட்டு… சவால்… சைகை… பதிலடி…! விஜய் சட்டப்பேரவை ஸ்பெஷல்!
September 8, 2026
கமல் – சுஜாதா கூட்டணியின் அசத்தல் சம்பவம்.. ‘விக்ரம்’ உருவான கதை!
September 8, 2026
விஜய் குறிப்பிட்ட அந்த மருமகள்… சபாநாயகரின் உறவினரா? திமுக EX MLA விளக்கம்..!
September 8, 2026
"ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போரை எதிர்க்கிறது; ஆனால், அவர்கள் வருந்தும் வரை.!" – ஈரான் அதிபர் அதிரடி
September 8, 2026
`கள் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கலாம்!' – தமிழக அரசுக்கு கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை
September 8, 2026
The First Episode of ‘Star Trek’ Was Not the Best Episode of ‘Star Trek’
September 8, 2026
Paramount Argues That the States Post a $1.88 Billion Bond to Cover Warner Bros. Bills
September 8, 2026
Ex-‘60 Minutes’ Managing Editor Goes Public After Firing, Tells CBS Staffers to “Hold the Line”
September 8, 2026
Baker Mayfield extension: NFL Insider confirms Buccaneers QB's three-year deal, reveals key contract details
September 8, 2026
How to Stream ‘The Drop: A Snowfall Saga,’ FX’s 2026 ‘Snowfall’ Spinoff
September 8, 2026
Today’s Wordle #1908: Hints, Clues And Answer For Wednesday September 9
September 8, 2026