தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக தலைமையில் புதியக் கூட்டணியை உருவாக்குவதற்கான கூட்டம் தான் அது என்றார்கள்.

விஜய் - பெ.சண்முகம்
விஜய் – பெ.சண்முகம்

அடுத்து நடைபெறக்கூடிய உள்ளாட்சி தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்களை இந்தக் கூட்டணியின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 9 ஆம் தேதி கூட்டம் நடைபெறுகிறது என்று எங்களிடம் தெரிவித்தார்கள்.

நாங்கள் எங்கள் கட்சியின் தலைவர்களுடன் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம் என்று தெரிவித்திருந்தோம்.

அதன் அடிப்படையில் நாளைய தினம் நடைபெற இருக்கக்கூடிய… தவெகவால் கூட்டணியை உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டப்படுகின்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதற்கு ஏற்கனவே நாங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அந்த ஆதரவு தொடரும்” என்று தெரிவித்திருக்கிறார்.

See all 774 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *