மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்ததால் இந்த இரண்டு இடங்களும் காலியாகின.

மரகதம் குமரவேல்
மரகதம் குமரவேல்

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் பி. சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், கே. பானுமதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நாதக இடைத்தேர்தல் வேட்பாளர்
நாதக இடைத்தேர்தல் வேட்பாளர்

மதுராந்தகம் தொகுதியில், கோ. ஜானகிராமன் என்பவரும், தாராபுரம் தொகுதியில், மு. கார்த்திகா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ச. கார்த்திக் குமாரி வேட்பாளராகக் களமிறக்கப்படுவதாக நாதக கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.

More in TamilNews
தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? September 13, 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? September 13, 2026 BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு September 13, 2026 "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் September 13, 2026 "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை "நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை September 13, 2026 "பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" – தோழர் பாலபாரதி கிண்டல்! "பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" – தோழர் பாலபாரதி கிண்டல்! September 13, 2026

See all 783 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *