தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார்.

விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுகவினர் பல்வேறு இடங்களில் நேற்று (செப்டம்பர் 12) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அங்கே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார். ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பின.

ஆ.ராசா பதிவு
ஆ.ராசா பதிவு

ஆ.ராசா பதிவு

இதையடுத்து, ஆ.ராசா தனது பேச்சிற்கு விளக்கம் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;

என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை.

நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்”.

More in TamilNews
இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா? இடைத்தேர்தல் 2026: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த சீமான்! – யார் யார் தெரியுமா? September 13, 2026 தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் – என்ன பேசினார்கள்? September 13, 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே? September 13, 2026 BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு September 13, 2026 "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் "தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார் September 13, 2026 "பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" – தோழர் பாலபாரதி கிண்டல்! "பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" – தோழர் பாலபாரதி கிண்டல்! September 13, 2026

See all 783 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *