ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து, மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள படம், ‘மண்டாடி’. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.

மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சுகாஷ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், ராமச்சந்திரன் துரைராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போன்று தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான படகுப் போட்டியும், மீனவ மக்களின் பண்பாட்டு அடையாளத்தையும் முன்னிறுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், நடிகர்கள் பலரும் நடிகர் சூரிக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

அதன் அடிப்படையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன் எக்ஸ் பக்கத்தில், “மண்டாடி திரைப்படத்திற்குச் சிறந்த விமர்சனங்கள்! சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்பிற்குப் பெரிய பலன் கிடைத்துள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் எப்போதுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும்! பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற எனது அன்பிற்குரிய அண்ணனுக்கும் முழு படக்குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More in Cinema
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி! பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி! September 12, 2026 என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்! என் புருஷனை பத்தி பேசாதீங்க.. எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு.. கொந்தளித்த சாக்ஷி அகர்வால்! September 12, 2026 அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு! அந்த விஷயத்தால் தான் விஜய் முதல்வரானார்.. ஆகாயம் பட இசை வெளியீட்டு விழாவில் தினந்தோறும் நாகராஜ் பேச்சு! September 12, 2026 த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்! த்ரிஷா அரசியலுக்கு வந்தா கதறி அழுவாங்க.. கல்யாணம் நிலைக்காது.. ஜாதக ரகசியத்தை உடைத்த ஜோதிடர்! September 12, 2026 கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை! கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை! September 12, 2026 அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!  அடக் கடவுளே.. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. தாயை இழந்து கதறும் மணிவண்ணன்!  September 12, 2026

See all 164 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *