தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ஊழல் லஞ்சம், கலெக்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை தவெக நடத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

 வீரபாண்டியன்,  பெ.சண்முகம்
வீரபாண்டியன், பெ.சண்முகம்

இந்த ஆட்சி நடைபெறுவதற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது இடதுசாரி கட்சிகள். நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். எங்கள் அமைச்சர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் நேர்மையாக இருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தந்த இடதுசாரி கட்சிகள் இப்போது தனித்து நிற்க முடிவு எடுத்தது என்னைப் போன்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தங்கள் முடிவை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆனால் அதனை அவர்கள் செய்ய மாட்டார்கள். முடிவு எடுத்த பிறகு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அவர்களின் இந்த முடிவை நாம் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று பேசியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

More in TamilNews
'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்? 'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்? September 15, 2026 `வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்! `வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்! September 15, 2026 சட்டமன்றம் 2026: `தனிப்பட்ட தாக்குதலை ஸ்டாலினே நடத்தியிருக்கிறார்; அதே பாணி.!' – ஜவஹர் அலி | களம் 02 சட்டமன்றம் 2026: `தனிப்பட்ட தாக்குதலை ஸ்டாலினே நடத்தியிருக்கிறார்; அதே பாணி.!' – ஜவஹர் அலி | களம் 02 September 15, 2026 “டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ – முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த் “டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ – முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த் September 15, 2026 `ஆஜராக வேண்டியவரே விசாரிப்பதா? மரபு மீறுவதில் திமுக ரூட்டில் தவெக‌' – முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் `ஆஜராக வேண்டியவரே விசாரிப்பதா? மரபு மீறுவதில் திமுக ரூட்டில் தவெக‌' – முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் September 15, 2026 "இது தான் தவெக சொன்ன மாற்றமா?" – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி "இது தான் தவெக சொன்ன மாற்றமா?" – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி September 15, 2026

See all 783 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *