‘ஜவான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார்.
அல்லு அர்ஜுனும் ‘புஷ்பா 2’ படத்தின் பேன் இந்தியா வெற்றிக்குப் பிறகு அட்லீயுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும் பொருட்செலவில், வரலாற்றுப் படமாக இது உருவாகிறது என்றும் கூறுகிறார்கள்.

அத்தோடு, கிராபிக்ஸுக்கும் அதிக முக்கியத்துவம் கொண்ட கதை இது எனவும் பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இன்று அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராக்கா’ படம் தொடர்பான சிறப்புத் தகவல் ஒன்றையும் படக்குழுவினர் பகிர்ந்திருக்கிறார்கள்.
நேரலை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 37 நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தின் ஒரு காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
அதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை இப்படம் படைத்திருக்கிறது.
HISTORY MADE A global triumph that takes Indian cinema to the world stage! #Raaka sets a Guinness World Record for the “Most People Motion-Captured in Real-Time”, with 37 performers captured simultaneously!
Mr. Allu Arjun and Mr. Atlee received the Guinness World Records… pic.twitter.com/BuozZNET6K— Sun Pictures (@sunpictures) September 21, 2026
இந்தத் தகவலைப் பகிர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், “வரலாறு படைக்கப்பட்டது. இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ஒரு சர்வதேச வெற்றி.
ஒரே நேரத்தில் 37 கலைஞர்கள் படம்பிடிக்கப்பட்டதன் மூலம், “ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன்-கேப்சர் (Motion-Captured in Real-Time) செய்யப்பட்ட திரைப்படம்” என்ற கின்னஸ் உலக சாதனையை ராக்கா படைத்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அடையாளம் காணும் வகையில், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயும் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள்.
"'அந்தோனி'க்கு விருது இல்லேனாலும் கூட" – ஆஸ்கர் போகும் முதல் இலங்கைத் தமிழ்ப்படம் குறித்து இயக்குநர்
September 21, 2026
"14 வயதிலிருந்தே அது கடினமாக இருந்தது" – தான் தாய்மையடைவதில் இருக்கும் சிக்கல் குறித்து ஸ்ருதிஹாசன்
September 21, 2026
Dorothy: "'வேற டிரெஸ் இல்ல, சட்டையை கழட்டி கொடு'னு பாரதிராஜா கேட்டார்!" – நினைவுகள் பகிரும் இளையராஜா
September 21, 2026
"இன்று கொண்டாடுறாங்க; ஆனா ஒரு வருடத்திற்கு முன்பு…" – ரிஷிகாந்த் குறித்து 'மொத ராத்திரி' இயக்குநர்
September 21, 2026
Jailer 2 First Review: ஜெயிலர் 2 முதல் விமர்சனம்.. சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் வேலை.. நெல்சன் சம்பவம்!
September 21, 2026
முதலமைச்சர் விஜய் மகனுக்கு இப்படியொரு பிரச்னை இருக்கா?.. ஓபனாக போட்டுடைத்த அன்புதாசன்!
September 21, 2026
Ceuta solidarity shirt row: How the crisis engulfed Spanish football
September 21, 2026
Paramount settles with US states in step towards merger with Warner Bros
September 21, 2026
‘Licence to kill:’ French protests decry police use-of-force bill
September 21, 2026
Airplane makes ‘miracle’ landing as Typhoon Dujuan hits Japan
September 21, 2026
Jerusalem Daily: Ben-Gvir demands death penalty for Palestinian who killed
September 21, 2026
How is Europe dealing with ‘hybrid war’?
September 21, 2026