சி.எம்.ஆர்.எல் தாது மணல் கம்பெனியிடம் இருந்து மகள் மூலம் லஞ்சம் பெற்றதாக சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறியது அமலாக்கத்துறை.
மேலும், பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி-க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தது.
அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த கேரளத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் சி.பி.எம் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், “கேரளத்தை ஆளும் இந்த அரசு சங்பரிவாரின் பி டீம் என்ற வகையில்தான் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமலாக்கத்துறை, கேரள முதல்வர் வி.டி.சதீசன் ஆகியோர் கூட்டாகச் செயல்படுகின்றனர்.
மோடி, இடி, வி.டி இணைந்து கம்யூனிஸ்டு இயக்கத்தை வேட்டையாட முயல்கின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, தற்போது அமலாக்கத்துறையின் வழிகாட்டுதல் பேரில் வழக்கை விசாரிப்பதற்கான அதிகாரம் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சி அரசியல் இயக்கங்களை நசுக்கும் நடவடிக்கையை பா.ஜ.க தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் வேலையைத்தான் இங்குள்ள அரசு செய்து கொண்டிருக்கிறது.
முன்னதாக, அமலாக்கத்துறை இதுபோன்ற உத்தரவுகளை தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளுக்குப் பிறப்பித்தபோது, அந்த மாநிலங்கள் அதனை முற்றிலுமாக நிராகரித்தன. ஆனால், இங்குள்ள அரசோ மத்திய ஏஜென்சியின் உத்தரவை ஏற்று ஆதரவளிக்கும் விசித்திரமான போக்கைக் கடைப்பிடிக்கிறது.

தேர்தல் காலங்களில் அமைக்கப்பட்ட இவர்களின் ரகசியக் கூட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னரும் அரசு மட்டத்தில் தொடர்கிறது. இந்த வழக்கு தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே, இதன் உண்மையான நோக்கம் பினராயி விஜயனைக் குறிவைப்பதுதான் என்பதை எங்கள் கட்சி மிகத் தெளிவாக விளக்கியிருந்தது.
மிரட்டியும் அச்சுறுத்தியும் அமலாக்கத்துறையினரால் தயாரிக்கப்பட்ட வாக்குமூலம் பின்னர் சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்வது சட்ட வரலாற்றிலேயே இதுவரை கேள்விப்படாத கேலிக்கூத்தான நடவடிக்கையாகும்.
அமலாக்கத்துறை மிரட்டித்தான் இந்த வழக்கில் பல வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் சதியைச் சட்டரீதியாகவும் அரசியல் தளத்திலும் நாங்கள் உறுதியுடன் எதிர்கொள்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை இத்தகைய அரசியல் வேட்டைக்கு ஒருபோதும் பலிகடா ஆக்க விடமாட்டோம்.

உண்மையான குற்றவாளிகளைப் பற்றி எந்த விசாரணையும் நடத்தாமல், அரசியல் உள்நோக்கத்துடன் பினராயி விஜயனையும் முகமது ரியாஸையும் மட்டுமே இலக்கு வைக்கிறார்கள். அரசியல் ரீதியாக இடதுசாரி இயக்கத்தைத் தகர்க்கத் துடிக்கும் பா.ஜ.க-வின் அஜெண்டாவுக்குக் கேரளத்தை தாரைவார்த்துக் கொடுக்கும் அநீதிதான் இங்கு நடக்கிறது.
இதனை நாங்கள் மிக வன்மையாகப் போராடி முறியடிப்போம். அரசு பதவியேற்ற விழாவில் வந்தே மாதரம் பாடியது முதலே, ஆட்சி நிர்வாக ரீதியாகவும் சங்பரிவாருக்கு அடிபணிய தொடங்கியது. அரசின் கொள்கை விளக்க உரையிலோ அல்லது பட்ஜெட் உரையிலோ மத்திய அரசைக் கண்டிக்கும் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை” என்றார்.
"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" – JP Morgan CEO
September 23, 2026
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!
September 23, 2026
"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" – நடிகை பார்வதி
September 23, 2026
பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!
September 23, 2026
America AI, தானாகவே China AI மீது Attack நடத்தினால்… போரே வெடிக்கும்! | AI Hotline Explained
September 23, 2026
"பினராயி விஜயன் மீது விசாரணைக்கு உத்தரவு" – அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று கேரள அரசு அதிரடி
September 23, 2026
"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" – JP Morgan CEO
September 23, 2026
ஆகஸ்ட் இருசக்கர விற்பனையில் டாப் 10 நிறுவனங்கள்… ஹீரோவை வீழ்த்தி ஹோண்டா ஆதிக்கம்!
September 23, 2026
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!
September 23, 2026
Madras High Court dismisses AIADMK whip’s case against amendment to Mekedatu resolution passed by Tamil Nadu Assembly
September 23, 2026
ரூ.80 லட்சத்தில் மின்சார பஸ், டிரக்குகளை அறிமுகப்படுத்தியது ஜேஎஸ்டபிள்யூ!
September 23, 2026
Rare snails lay eggs during car journey to zoo
September 23, 2026