அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல், மேல்சபை ஒப்புதல், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையெழுத்து எனத் தேவையான அனைத்து ஒப்புதலும் பெற்றுவிட்டது அமெரிக்காவின் ‘ரஷ்ய தடைச் சட்டம்’.
இந்தச் சட்டத்தின் மூலம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் ஐந்து நாடுகள் அமெரிக்காவில் 100 சதவீத வரியைச் சந்திக்கும்.
அந்த டாப் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதால், இந்தச் சட்டத்தின் அமல் கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறது. ஏனெனில், ரஷ்யாவிலிருந்து மிக அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடே சீனாதான்.

ரஷ்ய தடைச் சட்டம் குறித்து ஜேபி மார்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் இந்தியாவில் பேசியிருக்கிறார்.
ஜேமி டைமன் பேசும்போது, “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடைகளையும் சுங்க வரிகளையும் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
அவற்றை அமல்படுத்துவதற்கு முன்பு, ரஷ்ய எண்ணெயை இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டு, இந்தியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
ரஷ்யாவைத் தண்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், அமெரிக்கா இந்தியாவையும் உலக எண்ணெய் சந்தைகளையும் தண்டிக்கும் நிலையை உருவாக்கிவிடக் கூடாது.
இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் அமெரிக்கா அமர்ந்து நிதானமாக யோசிக்கும் என்று நம்புகிறேன்.
எண்ணெய் மீது எந்த வரியையும் விதிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
ரஷ்யாவைத் தாண்டிப் பிற நாடுகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளைத் தன்னிச்சையாக விதிப்பதற்குப் பதிலாக, வாஷிங்டன் நிர்வாகம் புதுடெல்லியுடன் பேச வேண்டும்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், வேறு எங்காவதிருந்து வாங்கித்தான் ஆக வேண்டும். அந்த எண்ணெய் இந்தியச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சரியானதாக இருக்காமல் இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!
September 23, 2026
"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" – நடிகை பார்வதி
September 23, 2026
பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!
September 23, 2026
America AI, தானாகவே China AI மீது Attack நடத்தினால்… போரே வெடிக்கும்! | AI Hotline Explained
September 23, 2026
"சங் பரிவாரின் B Team ஆக மாறிவிட்டது காங்கிரஸ் அரசு" – பினராயி மீதான விசாரணைக்கு சிபிஎம் கண்டனம்
September 23, 2026
"பினராயி விஜயன் மீது விசாரணைக்கு உத்தரவு" – அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று கேரள அரசு அதிரடி
September 23, 2026
ஆகஸ்ட் இருசக்கர விற்பனையில் டாப் 10 நிறுவனங்கள்… ஹீரோவை வீழ்த்தி ஹோண்டா ஆதிக்கம்!
September 23, 2026
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' – ஆவேசமான நிர்வாகிகள்!
September 23, 2026
Madras High Court dismisses AIADMK whip’s case against amendment to Mekedatu resolution passed by Tamil Nadu Assembly
September 23, 2026
ரூ.80 லட்சத்தில் மின்சார பஸ், டிரக்குகளை அறிமுகப்படுத்தியது ஜேஎஸ்டபிள்யூ!
September 23, 2026
Rare snails lay eggs during car journey to zoo
September 23, 2026
Dolly Parton’s Estate Sues Her Nephew Alleging ‘I’m A Killer’ Threats
September 23, 2026