இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓம்’ திரைப்படம் அடுத்த மாதம் 16-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Dhanush - OM
Dhanush – OM

ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது. அதனால் ‘ஓம்’ படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இன்றைய காலக்கட்டத்தில், ஒரு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தள்ளிவைப்பது என்பது பல சவால்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.

நாம் அனைவரும் இத்தனை ஆண்டுகளாக வியந்து பார்த்து, கொண்டாடிய நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் திரைப்படம், நமது திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதிக்கு முந்தைய நாளான அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அவர் மீது கொண்டுள்ள அளப்பரிய மரியாதையின் காரணமாக, ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம்.

OM - Release Date Postponed
OM – Release Date Postponed

அதேவேளையில், சூர்யா சாரின் திரைப்படமும் தீபாவளி வெளியீடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளிக்கும் நமது திரைப்படம் வெளியாகாது.

அவர்களே தங்களது வெளியீட்டுத் தேதியை முதலில் அறிவித்தார்கள்.

பெரிய திரைப்படங்கள் தங்களுக்குள் பரஸ்பர புரிதலையும், ஒருவரது முடிவுக்கு மற்றவர் மதிப்பளிப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதுவே சினிமாவுக்கும் திரைத்துறைக்கும் நல்லது என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நமது திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை வெகு விரைவில் அறிவிப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

More in Cinema

See all 191 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *