கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 25-ம் தேதி) வெளியான படம் டோரதி. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது என்கிற கான்செப்ட்டில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு திரையுலகிலிருந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. டோரதி திரைப்படம் குறித்தும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்தும் இயக்குநர் மணி ரத்னம் பேசியிருக்கிறார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், “கார்த்திக் சுப்புராஜ் மிக மிக விசேஷமான திறமைசாலி. நம்மிடம் பல இளம் நம்பிக்கையளிக்கும் இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் கார்த்திக்தான் லீடராக இருப்பார் எனத் தோன்றுகிறது.

டோரதி
டோரதி

இவரது டோரதி திரைப்படம் ரொம்ப ஸ்பெஷல். டோரதி படத்தின் சினிமா மொழி மிக மிக நன்றாக, மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. உண்மையிலேயே எனக்கு இவர் மீது பொறாமையாக இருக்கிறது. சினிமா மொழியின் மீதான கட்டுப்பாடு, காட்சி அமைப்புகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இதனுடன் இளையராஜா சாரின் இசையும் சேரும்போது மிக மிக அற்புதமாக இருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in Cinema
வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் வசமாக சிக்கிய சந்திரகலா.. சொந்த வீட்டையே கொளுத்த சொன்ன சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம் September 26, 2026 "அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்? "அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்? September 26, 2026 "என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர் "என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" – 'மொத ராத்திரி' இயக்குநர் September 26, 2026 நல்லவங்களை இந்த உலகம் வாழவிடாது.. அனாதையா இருக்கோம்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர்! நல்லவங்களை இந்த உலகம் வாழவிடாது.. அனாதையா இருக்கோம்.. நடிகை விஜயலட்சுமி கண்ணீர்! September 26, 2026 சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து! சாய் அபயங்கரை அட்டாக் செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி?.. மீசைய முறுக்கு 2 பஞ்சாயத்து! September 26, 2026 ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்! ஆணும் ஆணும் கிஸ்.. தியேட்டர்ல பார்க்கவே அருவருப்பா இருக்கு.. டோரதி படத்தை கிழித்த நெட்டிசன்கள்! September 26, 2026

See all 179 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *