சென்னை கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம். அவ்வப்போது தன் ரசிகர் சந்திப்பை நிகழ்த்த, ஓய்வு நேரத்தைக் கழிக்க, ரசிகர் மன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க என பல முக்கிய நிகழ்வுகளுக்கு ரஜினிகாந்த் இந்த மண்டபத்தைப் பயன்படுத்தி வந்தார். தனக்கு இஷ்டமான ராகவேந்திரரின் பெயரை வைத்து 90 களில் ரஜினிகாந்த் கட்டிய இந்தத் திருமண மண்டபம் விரைவில் நட்சத்திர ஹோட்டலாக மாறவிருக்கிறது.

இது தொடர்பாக ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் இங்கே…

ராகவேந்திரா திருமண மண்டபம்

”சுமார் ரெண்டு ஏக்கர் அளவுள்ள இந்த இடத்தை ரஜினி வாங்க நினைத்தபோதே போட்டி வந்தது. பிரபலமான உடையார் குடும்பமும் இந்த இடத்தை வாங்க ஆசைப்பட்டது. ரஜினி முதல்லயே விரும்பியதால் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் உடையார் தரப்பிடம் பேசி, இடம் ரஜினிக்குக் கிடைக்கும்படி செய்தார்.

இடம் வாங்கிய பிறகும் கூட அதில் மண்டபம் கட்ட ஆரம்பிக்கும் போதும் சில பிரச்னைகள் வரவே சில ஆண்டுகள் நிலம் சும்மாவே கிடந்தது.

ரஜினி ரசிகர் மன்ற சந்திப்பு

பிறகு எல்லாச் சிக்கல்களையும் முடித்து மண்டபத்தை கட்டி முடித்தார்.

மண்டபம் திறக்கப்பட்டது முதலே ஒருபுறம் திருமணங்கள் நடந்து வந்தாலும், ரஜினி ரசிகர் மன்றச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிற இடமாகவும் அது இருந்து வந்தது. முக்கிய முடிவுகளை எடுக்கிறபோது இங்கு வந்து விடுவார் ரஜினி.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட மண்டபம்தான் தற்போது இடிக்கப்பட்டு நட்சத்திர ஹோட்டலாக மாறப் போகிறது” என்கிறார்கள்.

ரஜினிக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு மக்கள் தொடர்பாளர் இது குறித்துக் கூறியபோது,

“நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில கிடந்தேன். தகவல் தெரிஞ்சு என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். `பையனை மண்டபத்துக்கு வரச் சொல்லுங்க’னு மட்டும் அப்பச் சொன்னார்.

ராகவேந்திரா திருமண மண்டபம்

மறுநாள் என மகன் அங்க போனான். ‘சார் கொடுக்கச் சொன்னார்’னு ஒரு பெரிய தொகை நிரப்பப்பட்ட செக் கொடுத்தாங்க. சத்தமில்லாம நிறைய உதவிகள் கிடைச்சிட்டிருந்த இடம்ங்க அது… இப்போ மண்டபம் ஹோட்டலா மாறுதுங்கிறதுல கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு” என்கிறார்.

அடுத்த சில மாதங்களில் மூன்று நட்சத்திர ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் அங்கு தொடங்கப்படலாமென தெரிகிறது.

More in Cinema

See all 168 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *