“மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனிமேல் எவரும் வாய் திறக்காத அளவிற்கு, எங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடக்கும்” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு மாட்டுக் கறி வழங்குவது குறித்து எவ்வித முன்யோசனையுமின்றி வன்னியரசு கொடுத்த அறிவிப்பை வாபஸ் பெறக் கோரி புதிய தமிழகம் கட்சியினுடைய முன்னெடுப்பில் நாளை சென்னையைத் தவிர, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக, காலை 11:00 மணி முதல் மதியம் நண்பகல் 01:00 மணி வரையிலும், அந்தந்த மாவட்ட புதிய தமிழகம் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான அனைத்து விதமான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இது ஏதோ ஒரு வாய்தவறி வந்த வார்த்தை என்று யாரும் கருதிவிடக் கூடாது. இந்த மாட்டுக் கறி அறிவிப்புக்குப் பின்னால் சாதி, மதம், அரசியல் மற்றும் சர்வதேச சதி ஆகிய பல்வேறு விதமான உள்நோக்கங்கள் புதைந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சமூக இயக்கங்கள் இதுபோன்ற ஒரு கருத்தைச் சொல்வதற்குத் துணிவில்லாத நிலையில், நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாகத் தங்களுக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒரு சிறிய அமைப்பு நீண்ட நாள் மறைத்து வைக்கப்பட்ட தங்களுடைய கோட்பாட்டை, தீயக் கொள்கையை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது திணிக்கும் இம்முயற்சியை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய தருணம் இது.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

எனவே, நாளை நடக்கக்கூடிய இந்த முதற்கட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், இனிமேல் ’மாட்டுக் கறி’ குறித்து தமிழகத்தில் எவரும் வாய் திறக்காத அளவிற்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடந்திட வேண்டும்.

இது ஒரு சடங்கிற்கான ஆர்ப்பாட்டம் அல்ல. ஒரு சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தின் துவக்கம் இது.

எனவே, நாளை நடக்கக்கூடிய போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டு, ஒத்த கருத்துள்ள அனைத்து அமைப்புகளையும் அழைத்து, இதில் தமிழகம் ஒன்றுதிரண்டு நிற்கும் என்பதை உறுதிப்படுத்திட வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியாக, அதே சமயத்தில் எழுச்சியாக, அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album September 29, 2026 `படத்துல மீனவனா வேடம் போட்டீங்களே விஜய்?' – கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் Spot Report `படத்துல மீனவனா வேடம் போட்டீங்களே விஜய்?' – கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் Spot Report September 29, 2026 நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து – உயர்நீதிமன்றம் நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து – உயர்நீதிமன்றம் September 29, 2026 "நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம் "நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம் September 29, 2026 “அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா September 29, 2026 "தவெக அரசு 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கிவிட்டது" – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு "தவெக அரசு 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கிவிட்டது" – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு September 29, 2026

See all 710 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *