2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஆடை’. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், அனன்யா ராமபிரசாத், விவேக் பிரசன்னா, ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுதந்திரமான சிந்தனை கொண்ட காமினி என்ற செய்தி ஊடகப் பெண், பார்ட்டி கொண்டாட்டத்திற்குப் பிறகு ஒரு பாழடைந்த கட்டடத்தில் ஆடைகளின்றி விழித்தெழும் சூழலையும், அதிலிருந்து தப்பிக்க போராடும் அவளது வாழ்வியல் போராட்டத்தையும் ஒரு த்ரில்லர் கதையாக இப்படம் விவரித்தது. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அவர் அளித்திருக்கும் பேட்டியில், “ஆடை படத்தில் நடித்தபோது என் இமேஜ் குறித்து பயம் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதில் நிச்சயம் நடிக்க மாட்டேன். இந்தப் படத்தின் கதை என்னிடம் கூறி, நான் நடிப்பது உறுதியானதிலிருந்து, இயக்குநர் ரத்னா குமார் இந்த கதையை எவ்வாறு கையாளப் போகிறார், ஆடையில்லாத காட்சிகள் படத்தின் கதைக்கு அவசியமானதாக இருக்குமா அல்லது விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா என யோசித்துக்கொண்டே இருந்தேன்.
படக்குழுவின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. முற்றிலும் நம்பிக்கை ஏற்பட்ட பிறகே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மீது எனக்கு முழு நம்பிக்கை தேவைப்பட்டது. இது ஓர் உணர்வுப்பூர்வமான, கலைநயமிக்க படமாக இருக்குமா அல்லது நிர்வணத்தை மட்டுமே முதன்மைப்படுத்தும் படமாக இருக்குமா என்பதே என் சந்தேகம்.

படைப்பு ரீதியாக இது சிறப்பாக உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை வந்த பிறகு, அது ஓர் அழகான அனுபவமாக மாறியது. மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் படப்பிடிப்பு நடத்தி என்னை சௌகரியமாக உணர வைத்தார்கள். இப்போது அதே மாதிரியான கதாபாத்திரம் வந்தால் நடிக்க மாட்டேன். ஏனென்றால் அப்படியே நம்மை முத்திரைக் குத்திவிடுவார்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஆடை படத்தில் நடித்ததை போல ஆடையின்றி இனிமே நடிக்க மாட்டேன்.. அமலா பால் என்ன இப்படி சொல்லிட்டாங்க!
October 1, 2026
வெளிவந்த பெரிய உண்மை.. கார்த்திகை தீபம் சீரியலில் கூடிய பஞ்சாயத்து!
October 1, 2026
ராமின் ஏழு கடல் ஏழு மலை.. சாதனையா? சோதனையா? நெட்டிசன்களின் ட்விட்டர் விமர்சனம்!
October 1, 2026
உடம்பை காட்டி சம்பாதிக்கிறவளுக்கு என்னடி மானம்?.. கேரவனுக்குள் எல்லை மீறிய தயாரிப்பாளர்!
October 1, 2026
ஜேசன் சஞ்சய்யை நல்லா வளர்த்துருக்காங்க.. விஜய், சங்கீதாவுக்கு சான்றிதழ் கொடுத்த டிடி!
October 1, 2026
ரஜினியின் சுயசரிதை வெப் சீரிஸா வருதா?.. மகள் சொன்ன சூப்பர் பதில்.. ட்ரீட் வெயிட்டா இருக்கு
October 1, 2026
கேப்டனை தாக்கியது துணை விமானியா? தீவிரவாதியா? ஈரானுக்குத் தொடர்பா?
October 1, 2026
ஆடை படத்தில் நடித்ததை போல ஆடையின்றி இனிமே நடிக்க மாட்டேன்.. அமலா பால் என்ன இப்படி சொல்லிட்டாங்க!
October 1, 2026
லட்டு மாதிரி தூக்குங்க.. ரூ.8,699-க்கு 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 8MP கேமரா.. 2TB மெமரி.. எந்த மாடல்?
October 1, 2026
இந்த Dress-அ வாங்கி போடுங்க… 30% ஆஃபர் அறிவித்த முதலமைச்சர் விஜய்..!
October 1, 2026
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2026.. 50எம்பி கேமரா.. 6 ஓஎஸ் அப்டேட்.. சாம்சங் 5ஜி போனுக்கு சூப்பர் ஆஃபர்!
October 1, 2026
சிங்கிள் சார்ஜில் 54 மணி நேரங்களுக்கு பேக்கப்.. ஸ்பாஷியல் ஆடியோ.. ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன்.. எந்த மாடல்?
October 1, 2026