குடும்பத்தின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கரம்பிடித்த சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, சில ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார ரீதியாகத் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். ஒரே நட்சத்திர விடுதியில் பணிபுரியும் இருவருக்கும் வேலைப்பளுவுக்கு நடுவே காதலிக்கக்கூட நேரமில்லை. இந்நிலையில் இயலின் கனவான ‘ஹோம் ஸ்டே’ ஒன்றைத் தொடங்கித் தருவதாகத் திருமணத்துக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நினைக்கிறார் சூர்யா. அதற்காக மலைப்பகுதியில் ஓர் அழகான வீட்டை வாங்க முடிவெடுக்கிறார். கனவு வாழ்க்கைக்காக அவர்கள் எடுத்துவைக்கும் இந்த அடி, எப்படி உயிர் பிழைத்தலுக்கான போராட்டமாக மாறுகிறது என்பதே அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயனின் ‘அன்பில் அவன்’.

அன்பையும் அக்கறையையும் மிகையின்றி வெளிப்படுத்தும் ‘கிரீன் ஃபிளாக்’ கணவராக அசோக் செல்வன் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, இடைவேளையை ஒட்டிய மனைவியுடனான வாக்குவாதத்தில் அவரது நிதானமான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இரண்டாம் பாதியின் ஆக்ஷன் காட்சிகளிலும் உடலுழைப்பைக் கொட்டியிருக்கிறார். காதல், கோபம், துணிச்சல் என இயலின் வெவ்வேறு மனநிலைகளை நன்றாக வெளிப்படுத்துகிறார் ப்ரீத்தி முகுந்தன். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தின் முக்கிய பலம். கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ், சபுமோன் உள்ளிட்டோர் வில்லத்தனத்துக்குத் தேவையான மிரட்டலைக் கொடுத்தாலும், அவர்களின் கதாபாத்திரங்கள் பழக்கப்பட்ட வார்ப்புகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன.
கோவிந்த் வசந்தாவின் இசை, காதல் காட்சிகளுக்கு மென்மையையும் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பரபரப்பையும் சேர்க்கிறது. கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் இந்த இரு பகுதிகளின் வெவ்வேறு ட்ரீட்மென்ட்டுகளுக்குத் துணை நிற்கிறது. ஆனால், காட்சிகளின் நீளத்தைக் கட்டுப்படுத்துவதில் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. இன்னும் கறாராக இருந்திருக்கலாம். இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமான படத்தின் நீளம், குறிப்பாகப் பின்பாதியில் பெரும் சுமையாகிறது.

சூர்யா–இயலின் உறவுதான் படத்தின் பலம். வீட்டு வேலைகளைச் செய்வதை மனைவிக்குச் செய்யும் ‘உதவி’யாகக் கருதாமல், அவளுடைய கனவைத் தனது கனவாக ஏற்கும் சூர்யாவின் பாத்திரப்படைப்பு அழகு. ‘நீ என் உயிர்’ என அவர் பேசும் வசனத்துக்கு, படத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் அர்த்தம் சேர்க்கின்றன. இருவருக்குமான சின்னச் சின்ன சீண்டல்கள் ரசிக்க வைக்கின்றன. இடைவேளையை ஒட்டிய வாக்குவாதத்தில், ஒருவர் பேசி முடிப்பதற்குள் மற்றொருவர் குறுக்கிடுவது வரை நிஜமான தம்பதிகளின் சண்டையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே காட்சிகள் வருவது சிறப்பு! ஆனால், இவர்கள் இருவரையும் விட்டு வெளியே வரும்போதெல்லாம் படம் தடுமாறுகிறது.
பல ஆண்டுகளாக வீட்டை விற்க மறுக்கும் ராணி மனம் மாறுவது சரி. ஆனால், எம்.எல்.ஏ.வின் எதிர்ப்பைப் பற்றிப் போதுமான எச்சரிக்கையைக் கொடுக்காமல் அவர் விலகுவது நெருடல். எம்.எல்.ஏ., வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி எனப் பதவிகள் மாறினாலும், வில்லத்தனம் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறது. இவர்களால் ஏற்படும் தடங்கல்களிலும் புதுமையோ பதற்றமோ இல்லை. காதலுக்கு அளித்த கவனத்தை மோதல்களுக்கும் கொடுத்திருந்தால், இந்தத் தம்பதியின் போராட்டத்தில் நம்மால் ஒன்றியிருக்க முடியும். இங்கே காட்சிகள் அனைத்துமே அடுத்தடுத்த பிரச்னைக்கான ஏற்பாடுகளாகவே தெரிகின்றன.

இரண்டாம் பாதியில், இந்தக் காதல் படம் முழுமையான சர்வைவல் ஆக்ஷன் த்ரில்லராக மாறுகிறது. மனைவிக்காக எதையும் செய்யத் துணிபவர் சூர்யா என்பது நிறுவப்பட்டிருந்தாலும், அவரை ‘ஒன் மேன் ஆர்மி’யாக மாற்றுவது ஏற்றுக்கொள்ளும்படி அமையவில்லை. ஆரம்பத்தில் சாகசங்களை விரும்புபவராகக் காட்டியிருப்பது மட்டுமே, ஒரு பெரிய கும்பலை அவர் தனியாக எதிர்கொள்கிறார் என்பதை நம்ப வைக்கப் போதுமானதா?
குறிப்பாக, நீண்ட க்ளைமாக்ஸ் சண்டையில் அடி, உதை, கத்தி குத்து என ஆக்ஷன் தொடர்ந்துகொண்டே இருப்பதால், இவர்களுக்கு என்ன ஆகுமோ என்கிற பதற்றத்தைவிடக் காட்சியின் நீளமே அதிகம் உணரப்படுகிறது. பீட்டர் ஹெய்னின் ஸ்டண்ட்ஸில் கடும் உழைப்பு தெரிகிறது. ஆனால், அந்த உழைப்புக்கு இணையான சுவாரஸ்யத்துடன் சண்டைக் காட்சிகள் அமைந்திருந்தால், சூர்யாவின் போராட்டம் நம்மையும் பதற்றத்துடன் பார்க்க வைத்திருக்கும்.

மொத்தத்தில், அன்பு செய்யும்போது ‘ஹார்ட்’ போடவைக்கும் ‘அன்பில் அவன்’, ஆக்ஷன் மோடில் பொறுமையைச் சோதிக்கிறான்!
மூடர்கூடம் : மடமையின் நுட்பம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 29
October 3, 2026
Sigma Review: நாலு பேரும் கோடிகளைக் கடத்தும் பிளானும்! ஆனால் இந்த ஆக்ஷன் ரூட்டில் புதுமை இருக்கிறதா?
October 2, 2026
Sigma: "படம் பார்த்துட்டு அம்மாவோட ரியாக்ஷன்…!" – ஜேசன் சஞ்சய்
October 2, 2026
Sigma: "நடிப்பு மேல முழுமையாக ஆர்வம் இல்லைனு சொல்லிட முடியாது. ஆனா…" – ஜேசன் சஞ்சய்
October 2, 2026
நடுக்கடலில் ஒரு சாகச புரமோஷன்.. ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் தெறிக்குதே!
October 2, 2026
நோ ரஜினி, நோ சூர்யா.. நோ நயன்தாரா.. கீர்த்தி சுரேஷ் உடன் மோதும் தனுஷ்.. ஓம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
October 2, 2026
IND vs WI: மீண்டும் சதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா.. தனி ஆளாக போராடி அணியை காப்பாற்றிய ஹிட்மேன்
October 3, 2026
சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. தொடரும் ஹிட்மேனின் ஆதிக்கம்
October 3, 2026
ஆசிய போட்டி 2026: இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் போட்டி முடிந்த பிறகு கை குலுக்கினார்களா?
October 3, 2026
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. செம ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
October 3, 2026
Dodgers continue quest for World Series three-peat
October 3, 2026
IND vs PAK: நக்வி-யை நோஸ் கட் செய்த ஜெய் ஷா.. இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்க நேரில் வந்தார்
October 3, 2026