தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்தக் கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும், இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு ரூ. 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் – உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல – கழக அரசுதான் என்பதே நிதர்சனமான உண்மை. 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாகக் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில்தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
Abusive Warriorsதான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்? அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்" – உச்ச நீதிமன்ற நீதிபதி
October 5, 2026
தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு?
October 5, 2026
ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்!
October 5, 2026
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம்
October 5, 2026
எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு
October 5, 2026
“முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" – ஆர்.எஸ்.பாரதி கேள்வி
October 5, 2026
L7 Unveil ‘Loma Linda’ Single Originally Recorded With Bassist Janis Tanaka in 2003
October 5, 2026
Miranda Lambert Is Ready to Party
October 5, 2026
Taylor Swift Nabs Yet Another Number One Song With ‘Patient Zero’
October 5, 2026
NASA Astronaut Christina Koch at Eagles vs. Rams
October 5, 2026
Carly Rae Jepsen Is Dropping Eight More Songs From Her Double Album
October 5, 2026
Doechii, Phoebe Bridgers, Hayley Williams Lead Primavera Sound Barcelona Lineup
October 5, 2026