கடந்த மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது.

ஏன் இந்தத் திடீர் மைனஸ் என்கிற கேள்வி எழுவது நியாயமானதே. இந்த வசூல் குறைவிற்கு ஆட்சி மாற்றம் போன்ற அரசியல் காரணங்களும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தச் சரிவிற்குப் பொருளாதார ரீதியிலான கோணத்தைத் தெரிந்துகொள்வதும் முக்கியம்.

தமிழ்நாட்டில் தற்போது ஏன் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது என்பதை பொருளாதாரக் கோணத்தில் விளக்குகிறார் பொருளாதார நிபுணர் சிவகுமார்.

”> ஜி.எஸ்.டி என்பது நுகர்வு சார்ந்த ஒரு வரி ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் உற்பத்தி மையங்களாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பிற மாநிலங்களுக்குச் சென்று நுகர்வுப் பொருள்களாக மாறுகின்றன.

பொருளாதார நிபுணர் சிவகுமார்
பொருளாதார நிபுணர் சிவகுமார்

இவை நுகர்வுப் பொருளாக மாறும் மாநிலங்களில், இதற்கான ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படும். ஆனால், அந்த ஜி.எஸ்.டி வசூல் தமிழ்நாட்டில் இருக்காது.

> திருப்பூர், ஈரோடு, சென்னை, ஆம்பூர், ஓசூர், ஶ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையங்களாகும்.

இங்கிருக்கும் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் வாங்கும் உள்ளீட்டுப் பொருள்களுக்குச் செலுத்திய ஜி.எஸ்.டி தொகையை ‘ரீஃபண்ட்’ பெற்றுவிடுகின்றனர்.

> ஏற்கெனவே கூறியதுபோல, தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மத்திய அரசு வெளியிடும் ஜி.எஸ்.டி வரி வசூல் அறிக்கை… உதாரணத்திற்கு 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி வசூல் எப்படி இருந்தது… 2025-ம் ஆண்டு அதே மாதம் ஜி.எஸ்.டி வசூல் எப்படி இருந்தது என்பதுபோல இருக்கும்.

கடந்த ஆண்டிற்கு, இந்த ஆண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இடைப்பட்ட காலத்தில், அமெரிக்காவின் பரஸ்பர வரி அமலுக்கு வந்துவிட்டது… ஈரான் போர் போல சர்வதேச சூழல்கள் பலவாறாக மாறியிருக்கிறது.

மே - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
மே – ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூன் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூன் – ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூலை - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஜூலை – ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஆகஸ்ட் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
ஆகஸ்ட் – ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
செப்டம்பர் - ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை
செப்டம்பர் – ஜி.எஸ்.டி வசூல் அறிக்கை

இதனால், கடந்த ஆண்டின் அந்த மாதத்தை ஒப்பிடும் போது, அமெரிக்காவின் வரி போன்ற காரணங்களால், ஜி.எஸ்.டி வரி வசூல் இறங்குமுகத்தில் இருப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்தது. இது பல பொருள்களின் ஜி.எஸ்.டி வரி மாற்றப்பட்டது.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோ பாகங்கள், சிமெண்ட், ஜவுளிப் போன்றவற்றின் ஜி.எஸ்.டி வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக மாற்றப்பட்டது.

இவை தமிழ்நாட்டின் மிக முக்கிய உற்பத்திகள். இதன் வரிகள் குறையும்போது, ஜி.எஸ்.டி வசூல் பாதிக்கப்படுகிறது.

> இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான ‘ஐ.ஜி.எஸ்.டி’ (IGST) சுங்கத் துறையால் வசூலிக்கப்பட்டு தேசிய அளவிலான மொத்தக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

தங்கம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன் வரி வருவாய் நேரடியாக மாநிலங்களின் மாதாந்திர தனிப்பட்ட கணக்கில் உடனடியாகக் காட்டப்படுவதில்லை.

> தமிழ்நாடு ஜி.எஸ்.டி வசூலில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக நாட்டின் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஏற்கனவே மிகப்பெரிய அளவில் வரி வசூல் கொண்டிருக்கும் ஒரு மாநிலம், சதவிகித அடிப்படையில் பார்க்கும் போது குறைந்த வளர்ச்சியையே காட்டும்.

இது வருவாய் வீழ்ச்சி அல்ல… மாறாக வளர்ச்சியின் வேகம் சற்று சீராக உள்ளது என்பதையே உணர்த்துகிறது.

> நாட்டின் முன்னணி சேவைத் துறை நிறுவனங்கள் (வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, மின்-வணிக நிறுவனங்களான அமேசான்) தங்களது முதன்மைப் பதிவை மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களிலேயே வைத்துள்ளன.

அவற்றின் வர்த்தகம் மற்றும் நுகர்வு இங்கே நடந்தாலும், கார்ப்பரேட் தலைமையகப் பதிவுகளின் அடிப்படையில் வரித் தொகை அம்மாநிலக் கணக்குகளிலேயே சேர்கிறது.

> ஒரு மாநிலத்தின் உண்மையான ஜி.எஸ்.டி வருவாய் என்பது ‘சொந்த எஸ்.ஜி.எஸ்.டி’ (SGST) மற்றும் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் ‘ஐ.ஜி.எஸ்.டி செட்டில்மென்ட்’ ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும்.

மாதாந்திரக் கணக்கீடுகளுக்கும், மத்திய அரசு பணத்தை விடுவிக்கும் கால இடைவெளிக்கும் இடையே உள்ள காலதாமதத்தால் தற்காலிகமாக வளர்ச்சி விகிதம் குறைவாகத் தோன்றலாம்” என்றார்.

ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு ஜி.எஸ்.டி தரவுகளைத் தான் வெளியிடும். உயர்வு… குறைவுக்கான அறிக்கையை வெளியிடாது. இதனால், என்னென்ன கோணங்களில் ஜி.எஸ்.டி வசூல் குறைந்திருக்கலாம் என்கிற கோணத்தில் இந்தக் கட்டுரை அணுகப்பட்டிருக்கிறது.

ட

More in TamilNews
மின்சார காரில் செல்லும் போது சிலருக்கு குமட்டல், வாந்தி வருவது ஏன்? மின்சார காரில் செல்லும் போது சிலருக்கு குமட்டல், வாந்தி வருவது ஏன்? October 5, 2026 எஸ்ஐஆர்: படிவம்-6 பற்றிய உச்சநீதிமன்ற கருத்தால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய நெருக்கடி – அடுத்தது என்ன? எஸ்ஐஆர்: படிவம்-6 பற்றிய உச்சநீதிமன்ற கருத்தால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய நெருக்கடி – அடுத்தது என்ன? October 5, 2026 கொசுவர்த்தி சுருளில் மறைந்துள்ள ஆபத்து – கொசு விரட்ட பாதுகாப்பான சிறந்த வழி எது? கொசுவர்த்தி சுருளில் மறைந்துள்ள ஆபத்து – கொசு விரட்ட பாதுகாப்பான சிறந்த வழி எது? October 5, 2026 தமிழ்நாட்டில் 3 மாதமாக ஜிஎஸ்டி வசூல் சரிவா? திமுக குற்றச்சாட்டும் அரசு பதிலும் – நிபுணர்கள் விளக்கம் தமிழ்நாட்டில் 3 மாதமாக ஜிஎஸ்டி வசூல் சரிவா? திமுக குற்றச்சாட்டும் அரசு பதிலும் – நிபுணர்கள் விளக்கம் October 5, 2026 கவிஞர் புலமைப்பித்தனின் 10 பிரபல பாடல்களின் தொகுப்பு – கண்ணதாசன் பாணியில் அவர் எழுதிய பாடல் தெரியுமா? கவிஞர் புலமைப்பித்தனின் 10 பிரபல பாடல்களின் தொகுப்பு – கண்ணதாசன் பாணியில் அவர் எழுதிய பாடல் தெரியுமா? October 5, 2026 ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? October 5, 2026

See all 695 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *