மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டோரதி’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (அக.7) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “நான் நம்பும் இரண்டு விஷயங்களை இந்தப் படம் நிறைவேற்றி இருக்கிறது. ஒன்று நாம் பேசக்கூடாது, படம் பேச வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது.
மற்றொரு விஷயம் சினிமா ஓர் ஆயுதம். அதனால் எதையும் மாற்ற முடியும். மக்களின் மனதை மாற்ற முடியும், சமூகத்தை மாற்ற முடியும் என்று நான் எப்போதும் நம்புவேன்.

‘டோரதி’ என்ற கதை எனக்கு எங்கு உருவானது என்றே தெரியவில்லை. திருநங்கைகளின் வாழ்க்கையை பட பண்ண வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன்.
பாலின பாகுப்பாடு இல்லாமல் மனிதர்களை மனிதர்களாகப் பார்த்தால் போதும். ‘நீங்கள் குறு குறு என்று பார்ப்பதால் தான் நாங்கள் பிச்சை எடுக்கிறோம், பாலியல் தொழில் செய்கிறோம்’ என்று ஜீவா அக்கா இந்தப் படத்தில் ஒரு டயலாக் சொல்லுவார்கள். அது உண்மை தான்.
நாம் அவர்களை சக மனிதர்களாகப் பார்க்க ஆரம்பித்திருந்தோமானால் அவர்கள் பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழில் செய்திருக்கவோ மாட்டார்கள். நான் தியேட்டருக்கு சென்று பார்த்தபோது நிறைய ஆண்களும், பெண்களும் அழுதார்கள்.
இதுவரைக்கும் நாங்கள் பார்த்த பார்வைக்கும், இனிமேல் நாங்கள் திருநங்கைகளைப் பார்க்கும் பார்வைக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.

இந்தப் படம் எங்களுக்குள் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்று நிறைய பேர் சொன்னார்கள். அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்.
இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஏன்னென்றால் நான் தியேட்டருக்கு சென்று பார்த்தபோது மக்கள் எங்களுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Sigma Day 6 Box Office – சிக்மா 6வது நாள் வசூல் தெரியுமா?.. விஜய் மகனை பாக்ஸ் ஆஃபிஸ் பாதுகாத்ததா?
October 8, 2026
Dorothy: "கார்த்திக் சுப்புராஜோட போன படம் மொக்கையாகத்தான் இருந்துச்சு!" – மிஷ்கின் ஓபன் டாக்
October 8, 2026
Baththa Day 7 Box Office – பத்தா 7வது நாள் வசூல் இவ்வளவா?.. ஒரு வார பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
October 8, 2026
Baththa Vasantha Balan's Review – பத்தா விமர்சனம் சொன்ன வசந்தபாலன்.. கொண்டாடி தீர்த்துட்டாரு பாஸ்
October 8, 2026
Jailer 2 First Review – ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 முதல் விமர்சனம்.. திருவிழா அனுபவம் உறுதியாம்
October 8, 2026
BB10: நானும் அங்க புடிச்சி இழுக்கட்டுமா? முனியம்மாவிடம் அநாகரீக பேசிய ஜேசன்.. குவியும் கண்டனம்!
October 7, 2026
Arc Raiders Exploring Pendola Pass Quest Guide
October 8, 2026
US Video Game Hardware Sales Just Had Their Worst August In 13 Years
October 8, 2026
Joe Rogan Renews Multiyear Spotify Partnership
October 8, 2026
Xbox Is Going Bigger On Movies, TV, And More With New XP Division
October 8, 2026
Evans to defend title in extended WRC calendar including Scotland
October 8, 2026
Xbox Forms New Division Focused on Film and TV Adaptations
October 8, 2026