தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள புதுமனை அம்மாள் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவப்பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீவைகுண்டம்  தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ., குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணனுடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், அவரது தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றியதாகவும் வைணவப்பெருமாள் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

பண மோசடிப் புகார் கூறும் வைணவப் பெருமாள்

இதுகுறித்து வைணவப் பெருமாளிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலவாரியத்தில் உறுப்பினர் பதவிக்காக  விண்ணப்பித்திருந்தேன். அந்தப் பணிக்கு முன்பணமாக வேண்டும் எனக்கூறி ரூ.60 ஆயிரம் பணத்தை என்னிடம் எம்.எல்.ஏ சரவணன் கேட்டார். நானும் இதனை நம்பி, அதிக வட்டிக்கு கடன் வாங்கி ரூ.60 ஆயிரத்தை பணம் கொடுத்தேன். ஆனால், ஒரு மாத காலமாகியும் தற்போது வரை  எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் முறையான பதில் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அந்தப் பதவி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த வேறொருவருக்கு வழங்கப்பட்டதாக செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டேன். இதையடுத்து நேரில் சென்று அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, பணத்தைத் திருப்பித் தராமல் என்னை அச்சுறுத்தும் வகையிலும், மிரட்டும் வகையிலும் பேசினார்.  வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்ததால் தற்போது குடும்பத்துடன் கடும் சிரமத்தை சந்தித்து வருவகிறேன். நான் அவரிடம் கொடுத்த ரூ.60 ஆயிரம் பணத்தை மீட்டுத் தர வேண்டும்.

சரவணன் எம்.எல்.ஏ

அத்துடன் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி தனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் வைணவப்பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளேன்” எனக்கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ சரவணனை தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பினை ஏற்கவில்லை. அவரது ஆதரவாளர்களோ ”வைணவப் பெருமாள் கூறுவதில் உண்மையில்லை” என்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

More in TamilNews
பட்டினப்பாக்கம்: "இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே நிலப் பயன்பாடு மாற்றமா?" – அரசுக்கு சீமான் கண்டனம்! பட்டினப்பாக்கம்: "இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே நிலப் பயன்பாடு மாற்றமா?" – அரசுக்கு சீமான் கண்டனம்! October 8, 2026 TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள் TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள் October 8, 2026 “விஷக் குப்பியா… தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" – கேட்கிறார் திலகபாமா “விஷக் குப்பியா… தூக்குக் கயிறா? ஏன் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும்?" – கேட்கிறார் திலகபாமா October 8, 2026 "பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவே..!" – எலான் மஸ்க் பதிவிற்கு மத்திய அரசு பதில் "பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவே..!" – எலான் மஸ்க் பதிவிற்கு மத்திய அரசு பதில் October 8, 2026 கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார் கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார் October 8, 2026 "இதை என்னால் நம்ம முடியவில்லை, பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.!"- நானா படேகருக்கு குஷ்பு இரங்கல் "இதை என்னால் நம்ம முடியவில்லை, பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.!"- நானா படேகருக்கு குஷ்பு இரங்கல் October 8, 2026

See all 649 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *