தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தற்போதும் அங்கம் வகித்துவருவதாகச் சொல்லிவரும் பாட்டாளி மக்கள் கட்சி, நடந்துமுடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கி நின்றுகொண்டது.
‘ஆளுங்கட்சியான த.வெ.க வேட்பாளருக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்’ என்று ஆரம்பத்தில் வலியுறுத்தியது பா.ம.க. ஆனால், அது நடைமுறை சாத்தியமற்றது என்று உணர்ந்த எதிர்க்கட்சிகள் தத்தமது வேட்பாளர்களை களமிறக்கிவிடவே, அமைதியாக ஒதுங்கிக்கொண்டது பா.ம.க.
குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் 9% வாக்குவங்கியை வைத்திருக்கும் பா.ம.க ‘இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’ என அறிவித்ததிலிருந்தே தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
த.வெ.க அரசுக்கு ஆதரவளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொடர்ந்து ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராக குரல் எழுப்பிவருவதால், எந்நேரத்திலும் ஆதரவை விலக்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், “கம்யூனிஸ்ட்டுகள் விலகிக்கொண்டால், பா.ம.க-வின் 4 எம்.எல்.ஏ-க்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக்கிக்கொள்ளும் முயற்சியாக த.வெ.க தலைமை பா.ம.க-வுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் பேச்சு எழுந்தது.

இதன் முன்னோட்டமாகவே, ‘இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை’ என்று முடிவெடுத்து பா.ம.க ஒதுங்கிக்கொண்டு, தொகுதியிலுள்ள பா.ம.க-வின் கணிசமான வாக்குகள் த.வெ.க வேட்பாளருக்குச் செல்ல வழி வகுத்துள்ளது” என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், நடப்பு அரசியல் குறித்த கேள்விகளோடு பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம்…
“இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என பா.ம.க ஒதுங்கி நிற்பதே, த.வெ.க-வுக்கான மறைமுக ஆதரவுதானே?”
“‘ஆளுங்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க அ.தி.மு.க-வுக்கு பா.ம.க ஆதரவளித்திருக்க வேண்டும்’ என்று நீங்கள் நினைப்பதெல்லாம் மேலோட்டமான பார்வை. ஆனால், ஆழமான அரசியல் புரிதலோடும் தொலைநோக்குப் பார்வையோடும்தான் நாங்கள் ‘பொதுவேட்பாளர்’ என்று நிலைப்பாட்டை அறிவித்தோம்.
ஆனாலும் பொதுவேட்பாளரை நிறுத்த எந்தக் கட்சியும் தயாரில்லை எனும்போது, நாங்கள் ஒதுங்கி நிற்பதைத்தவிர வேறு வழியில்லை என்ற எங்கள் கட்சியின் கருத்தை நாங்கள் ஏற்கெனவே தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டோம்.
இந்த நிலையில், எங்கள் நிலைப்பாடு குறித்து நீங்கள் யூகிப்பதற்கெல்லாம் நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும்?”
“மதுராந்தகம் தொகுதியில் மட்டுமே 9% வாக்குகளைக் கொண்ட பா.ம.க, போட்டியிடாமல் ஒதுங்கி நிற்பது கேள்விக்குள்ளாகும்தானே?”
“இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்களும் தங்களது ராஜினாமா மூலம் ஏற்கெனவே ஜனநாயகப் படுகொலையை செய்துவிட்டார்கள். எனவே, அதை எதிர்த்து பா.ம.க தொடர்ந்து உரத்துக் குரல் கொடுத்துவருகிறது.
அதேசமயம், இந்த இரண்டு தனித்தொகுதிகளிலும் தனித்தனி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி, பட்டியிலின மக்களை மோதவிடுவது தேவையற்றது. அதற்கு மாற்றாக அனைத்துக் கட்சிகளும் ஒருங்கே முடிவெடுத்து ஒரு பொதுவேட்பாளரைத் தேர்ந்தெடுத்துவிடலாம் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே எங்கள் கட்சித் தலைமை சொல்லிவந்தது. ஆனால், உடன் இருக்கும் கட்சிகள் எதுவும் எங்களுக்கு துணை நிற்கவில்லை.

இந்த நிலையில் ‘விஷக் குப்பியைத் தேர்ந்தெடுக்கிறாயா அல்லது தூக்குக் கயிறை தேர்ந்தெடுக்கிறாயா…’ என்பதுபோல் ஏதாவது ஒரு கட்சியை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? அதனால்தான் விலகி நிற்கிறோம்.
முக்கியமான விஷயம்… இந்த இடைத்தேர்தல் வெற்றி, தோல்வி தமிழக அரசியலில் எந்தவித மாற்றத்தையும் உருவாக்கப்போவதில்லை எனும்போது, தொண்டர்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டோம்.”
“ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்துவந்தாலும்கூட, ‘பதவி ஆசையில் ஜனநாயகத்தை சீரழித்தவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்’ என்ற உறுதியோடு ஆளுங்கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றனவே கம்யூனிஸ்ட் கட்சிகள்?”
” ‘த.வெ.க வேட்பாளர்களாக களமிறங்கியிருப்பவர்கள் ஜனநாயகத்தை சீரழித்தவர்கள்’ என்று உண்மையிலேயே கம்யூனிஸ்ட் கட்சிகள் நினைத்திருந்தால் ஆட்சிக்கான ஆதரவைத்தானே வாபஸ் வாங்கியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்த்துப் போட்டியிடுவது எந்த மாதிரியான அரசியல்?”
“அண்மையில், ‘தாமிரபரணி நாயகி’ என சௌமியா அன்புமணிக்கு பட்டம் கொடுத்திருக்கிறீர்களே… தென் மாவட்டங்களிலும் பா.ம.க-வை பலப்படுத்தும் திட்டமா?”
“பட்டத்தை நாங்கள் கொடுக்கவில்லை. சென்னை வாழ் நெல்லைவாசிகளும் விவசாயிகளும் சேர்ந்து இந்த பட்டத்தை சௌமியா அன்புமணிக்குக் கொடுத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் தாமிரபரணி குறித்து சௌமியா அன்புமணி பேசிய கருத்து, அனைத்து மக்களையும் சென்றடைந்திருக்கிறது. எனவே தென் மாவட்டங்களிலும் மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் வெளிப்பாடாகவே இந்தப் பட்டத்தையும் அந்த மக்களே வழங்கியிருக்கிறார்கள்.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
பட்டினப்பாக்கம்: "இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே நிலப் பயன்பாடு மாற்றமா?" – அரசுக்கு சீமான் கண்டனம்!
October 8, 2026
TVK: அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ திடீர் ஆய்வு; மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்கள்
October 8, 2026
"பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவே..!" – எலான் மஸ்க் பதிவிற்கு மத்திய அரசு பதில்
October 8, 2026
கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார்
October 8, 2026
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார்; வைரலாகும் வீடியோ!
October 8, 2026
"இதை என்னால் நம்ம முடியவில்லை, பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.!"- நானா படேகருக்கு குஷ்பு இரங்கல்
October 8, 2026
BJP slams TVK-led govt. over sexual assault on five-year-old in Gummidipoondi
October 8, 2026
Minister reviews monsoon preparedness in Chennai’s Adyar Zone
October 8, 2026
அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. செம ஆஃபரில் boAt 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
October 8, 2026
அமேசான் மிரளுது.. ரூ.9000 தள்ளுபடி.. 65 இன்ச் SONY டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
October 8, 2026
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்.. டால்பி அட்மாஸ்.. பிலிப்ஸ் 4k டிவிக்கு அதிரடி ஆஃபர்.. எந்த மாடல்?
October 8, 2026
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை எப்போது? முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நல்ல நேரம் எது?
October 8, 2026