தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், கேரளாவின் புதிய ஆளுநராக சிக்கிம் ஆளுநரான ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார். ​தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தார். தற்போது அவர் அப்பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டு, தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக கோவா சட்டப்பேரவை சபாநாயகராகவும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அர்லேகர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் காலியான கேரள ஆளுநர் பதவிக்கு, சிக்கிம் ஆளுநராக பணியாற்றி வரும் ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் (74), ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் பிரச்சாரகரும், பாஜகவின் மூத்த தலைவரும் ஆவார். 2008–2009 காலகட்டத்தில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க தலைவராக இருந்த இவர், மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2024 ஜூலை 31 முதல் சிக்கிம் ஆளுநராகப் பதவி வகித்து வந்த இவர், தற்போது கேரளாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

​பிற மாநில ஆளுநர்கள் விவரம்:

ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளாவுக்கு மாற்றப்பட்டதால் காலியான சிக்கிம் ஆளுநர் பதவிக்கு, பா.ஜ.க முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான துஷ்யந்த் கௌதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ் மாத்தூர்

கர்நாடக ஆளுநராக ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. டாக்டர் சுதா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் முன்னாள் எம்.பி. பிரஜ்மோகன் ராம் ஒடிசா ஆளுநராகவும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் டாக்டர் தல் சிங் பிசேன் உத்தரகாண்ட் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ​அதேவேளையில், கர்நாடக ஆளுநராக இருந்த தாவர்சந்த் கெலாட், ஒடிசா ஆளுநர் ஹரிபாபு கம்பம்பாட்டி மற்றும் உத்தரகாண்ட் ஆளுநர் குர்மீத் சிங் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றுப் பொறுப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

More in TamilNews
“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி “சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி October 13, 2026 ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்! ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்! October 13, 2026 ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்! ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்! October 13, 2026 "திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" – TRB ராஜா கேள்வி "திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" – TRB ராஜா கேள்வி October 13, 2026 'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன் 'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன் October 13, 2026 “ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம் “ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம் October 13, 2026

See all 675 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *