தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய உள்ளதாக நேற்று (அக்டோபர் 12) அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்குக் கொள்முதலா என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு தொழிற்துறையின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

“₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் TVK அரசின் நிர்வாகம்!

தேர்தலுக்குப் பின் பதவி ஏற்ற தவெக அரசு 2026 மே 23-ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டிக் கேள்விக்குள்ளாக்கினார்கள்!

மின்சாரம்
மின்சாரம்

ஜோசியம் பார்த்துக் கடைசி நேரத்திலா?

அதே TVK அரசு 2026 ஜூன் 25-ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது.

ஆனால் 2026 அக்டோபர் 12-ல், ஒரு யூனிட் ₹37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்!திமுக ஆட்சியில் வெறும் ₹5.40 முதல் ₹9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று?

செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ₹16 முதல் ₹20 வரை தனக்கான அக்டோபர் மாதத் தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது.

தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்துக் கடைசி நேரம் வரை காத்திருந்ததா?

7 மடங்கு அதிக விலை…

தலைவர் ஸ்டாலின் அவர்களின் திறமையான திராவிட மாடல் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன!

இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?

வீண் செலவு ஏன்?

மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படுமோசமாகச் சொதப்பியதால்தான் இன்று இந்த நிலை!

தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்!

மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்?

மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட முடியுமா?”

More in TamilNews
“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி “சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” – அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி October 13, 2026 ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்! ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்! October 13, 2026 ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்! ADMK: " நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்" செங்கோட்டையன்! October 13, 2026 'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன் 'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன் October 13, 2026 “ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம் “ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம் October 13, 2026 கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்! கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்! October 13, 2026

See all 683 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *