ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் நாளை ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த குழுவினர் இதிலும் தொடர, சில புதிய கதாபாத்திரங்களையும் இதில் இணைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரஜினியுடன் இணைந்து நடித்ததில் பெரும் மகிழ்ச்சியோடும் இருக்கிறார். படம் வெளியாகவிருக்கும் நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா சினிமா விகடன் சேனலுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், “திரையுலகிற்கு வரும் எந்தவொரு நடிகருக்கும் ரஜினி சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவாக இருக்கும். அதை அடையும்போது ஏற்படும் சந்தோஷத்தையும் அனுபவத்தையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அதை உணரத்தான் முடியும்.
இதற்கு முன்பே ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை சிறிய கதாபாத்திரங்களாக இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.
ரஜினி சாருடன் நடிக்கும்போது நல்ல கதாபாத்திரமாக, ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்தப் பசிக்கான சரியான விருந்தாக ‘ஜெயிலர் 2’ அமைந்துள்ளது.
சினிமாவில் ஒரு நடிகர் புதுமுகமாக வரும்போது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், 5-வது படம் வரும்போதே பலர் காணாமல் போய்விடுவார்கள்.
50 பேர் வந்தால் அதில் 45 பேர் வாஷ் அவுட் ஆகிவிடுவார்கள். மீதி 5 பேர் தடுமாறி 5 ஆண்டுகள் பயணிப்பார்கள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாகத் தன் சொந்த சாதனைகளைத் தானே முறியடித்து ரஜினி சார் வலம் வருவது அசாத்தியமானது.
அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதும், அவர் நம்மிடம் நடித்துக் காட்டுவதும் ஒரு மாபெரும் அனுபவம். ஸ்பாட்டில் ஒரு நடிகராகவும், மனிதராகவும் அவர் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்.

எந்தப் பல்கலைக்கழகத்திலும் இதைக் கற்க முடியாது.” என்றவர் இயக்குநர் நெல்சன் குறித்து, “இயக்குநர் நெல்சனிடம் ஒரு பெரிய அசாத்தியத் திறமை இருக்கிறது. எவ்வளவு பெரிய விஷயத்தையும் மிக இயல்பாகச் செய்துவிடுவார்.
வெளியே மிகவும் கூலாகக் காணப்பட்டாலும், காட்சிக்குள் மிகப்பெரிய விஷயங்களை வைத்திருப்பார். ஒரு பஞ்ச் டயலாக் பேசுவதற்கு இணையான கெத்தை, ஒரு டிஷ்யூ பேப்பர் பாக்ஸைத் தள்ளி வைப்பதன் மூலம் அசால்ட்டாகக் கொண்டுவந்துவிடுவார்.
அவருடைய படத்தில் போதி கல்பக் என்கிற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நெல்சன் சார் நம்மை இயக்கும்போது, ஒரு நடிகனாக நம்மை நாமே மறு உருவாக்கம் செய்துகொள்ள முடியும்.
ஒரு முறை, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சி 3-4 டேக்குகளுக்குப் பிறகு நெல்சன் சார் டேக் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் நான், ‘சார், இன்னும் ஒரே ஒரு டேக் போகலாமா?’ எனக் கேட்டேன். உடனே ரஜினி சார் சிரித்துக்கொண்டே, ‘என்ன சூர்யா, அவர் ஓகே சொல்வதே பெரிய விஷயம்.
நீங்க ஏன் ஒன் மோரா கேட்கிறீங்க?’ என்று கலாய்த்தார். ரஜினி சார் என்னைப் பார்த்து, ‘நானும் ஒரு காலத்தில் உங்களைப் போலத்தான் வெறியோடு இருந்தேன், வெரி குட் சூர்யா!’ என்று பாராட்டவும் செய்தார்.” எனப் பகிர்ந்திருக்கிறார்.
விஜய் ரெஃபரன்ஸ் பக்காவா இருக்கே.. கீர்த்தி சுரேஷின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் எப்படி இருக்கு?
October 14, 2026
இந்தியன் 2, கேம் சேஞ்சர், சர்தார் 2.. எஸ்.ஜே. சூர்யாவை நினைச்சா தான் பயமா இருக்கு.. ஜெயிலர் 2 என்ன ஆகும்?
October 14, 2026
ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்.. ஒரே ஒரு தலைவர்.. 'ஜெயிலர் 2' முதல் விமர்சனத்தை வெளியிட்ட அனிருத்!
October 14, 2026
செகண்ட் ஹேண்ட் கார் ஓட்டிய SK.. ஆடி காரை யார் வாங்கி கொடுத்தா? சிவகார்த்திகேயனை விளாசிய பிஸ்மி!
October 14, 2026
East of Eden Review: பெத்த குழந்தைகளை விட்டுட்டு.. விபச்சார விடுதி நடத்தும் நாயகி.. ஈஸ்ட் ஆஃப் ஈடன் விமர்சனம்!
October 14, 2026
ஜெயிலர் 2 வெளியாவதில் சிக்கல்.. 65% தர முடியாது.. 75% வேணும்.. ரசிகர்கள் கவலை!
October 14, 2026
Reform faces criticism after councillors filmed making racist comments
October 14, 2026
UK threatens to ban Eritreans over migrant return policy
October 14, 2026
BFI crisis grows, president, secretary suspend each other
October 14, 2026
Social Security COLA 2027: 3.6% increase adds $75 a month, but retirees say it’s not enough
October 14, 2026
Xbox Introduces New Pocket-Size Nano Controller
October 14, 2026
Trump personally coached Katie Zacharia before 14-minute briefing; what happened
October 14, 2026