தென்கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. அதன்படி நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் புதுச்சேரி வெள்ளக்காடானது.
புதுச்சேரியில் எப்போது மழை பெய்தாலும் முதலில் பாதிக்கப்படுவது காமராஜர் நகர் தொகுதியும், அதற்குட்பட்ட கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கடேஸ்வரா நகர், கவிக்குயில் நகர் உள்ளிட்ட பகுதிகள்தாம். ஓர் இரவு தொடர்ச்சியாக மழை பெய்தாலே அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கிவிடும்.
அதுவே கனமழையாக இருந்தால், படகில் சென்று மீட்புப் பணியை மேற்கொள்ளும் அளவுக்கு அந்தப் பகுதி துண்டிக்கப்பட்டுவிடும். அதற்குக் காரணம் அது தாழ்வான நிலப்பகுதி. அதன்படி நேற்று இரவு பெய்த மழையில் வெள்ளக் காடானது காமராஜர் நகர் தொகுதி.

அதையடுத்து `பாண்டி ஜங்க்ஷன்’ இன்ஸ்டா பக்கத்தில் பேசிய காமராஜர் நகர் தொகுதிவாசி ஒருவர், “ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அண்ணா… இந்தத் தொகுதியோட எம்.எல்.ஏ நீங்கதான். உங்களுக்கு குட் நைட் அண்ணா. நீங்கள் நிம்மதியாகத் தூங்குகிறீர்கள் என்று நினைக்கறேன். ஆனால் எங்களால் தூங்க முடியுமா என்று தெரியவில்லை.
ஏனென்றால் மழை பெய்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இன்றிரவு முழுக்க வீட்டிற்குள் இருக்கும் நீரை வெளியேற்றுவதுதான் எங்கள் வேலையாக இருக்கும். மழை நேரத்தில் இப்படி வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது என்று உங்களை மூன்று முறை நேரில் சந்தித்து மனு கொடுத்திருக்கிறேன்.
அதற்கு நீங்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வெற்றிபெற்ற பிறகு இந்த ஏரியா பக்கம் கூட நீங்கள் வரவில்லை. நீங்கள் இந்த ஊரில் இருக்கிறீர்களா என்றுகூடத் தெரியவில்லை. உங்களைத் தேடி உங்கள் அலுவலகம் வந்தால், சார் வெளியே போயிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
வெளியூரில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட்டது எங்களுடைய தவறுதான். இந்தப் பகுதியில் மழை நீர் தேங்குவதற்கான இரண்டு முக்கியக் காரணங்களை நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன். ஒன்று இது தாழ்வான பகுதி. மற்றொன்று வாய்க்காலைத் தூர்வாருவது.
நீங்களும் தூர்வாருவதாகக் கூறினீர்கள். அதன்பிறகு தூர்வாருவதற்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் தூர்வாரிவிட்டோம் என்று உங்களை ஏமாற்றுகிறார்களா அல்லது, நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்களா என்று தெரியவில்லை.
முன்பெல்லாம் மழை பெய்தால் கொஞ்சம் தாமதமாகத்தான் தண்ணீர் தேங்கும். இப்போது உடனே சாலை முழுக்க தண்ணீர் நிற்கிறது. புயல் நேரத்தில் கூட குறைவான தண்ணீரைத்தான் பார்த்தோம். ஆனால் அரைமணி நேர மழைக்கு இவ்வளவு தண்ணீரைப் பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று பேசியிருந்தார்.

அதையடுத்து அந்த வீடியோவின் கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டிருந்த எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ், ”நான் புதுச்சேரியில்தான் இருக்கிறேன் ப்ரோ. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் நமது மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமியிடம் இதே கேள்வியை ஏன் நீங்கள் கேட்பதில்லை?
ஸ்மார்ட் சிட்டி நிதியைப் பயன்படுத்தாமல் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான பணத்தைத் திருப்பி அனுப்பிய அவரிடம் கேள்வி கேட்க உங்களுக்குப் பயமா? எம்.எல்.ஏ தொகுதிக்காக அரசு ரூ.3 கோடி ஒதுக்குகிறது.
ஆனால், அந்தத் தொகை இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், காமராஜர் நகர் தொகுதிக்காக இதுவரை என்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து ரூ.4 கோடி செலவு செய்திருக்கிறேன். தொடர்ந்து தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், உங்களுக்குக் கொஞ்சம்கூடப் பொது அறிவு இல்லை. நாங்கள் சுத்தம் செய்த வடிகால்களில் நீங்கள் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுகிறீர்கள்.
கடந்த முறை மட்டும் 9 டிராக்டர்கள் அளவுக்கு வாய்க்கால்களில் இருந்து கழிவுகளை அகற்றினோம். அதேபோல இப்போதும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த இடங்கள் அனைத்தும் முன்பு ஏரிகளாகவும் குளங்களாகவும் இருந்தவை.
நீங்கள் சட்டவிரோதமாக அனுமதிகளைப் பெற்று, அங்கு உங்கள் வீட்டைக் கட்டியிருக்கிறீர்கள். ஆனால், முதலமைச்சரிடம் கேள்வி கேட்காமல், ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் கேள்வி கேட்கிறீர்கள். உங்கள் பொது அறிவுக்கு ஒரு சபாஷ்!” என்று காட்டமாகப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதையடுத்து, ”அறிவுப்பூர்வமான பதில் சார். மக்கள் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் தவறாகப் பயன்படுத்திவிட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்போது மற்றவர்களைக் குறை கூறுகிறார்கள்” என்று அவருக்கு ஆதரவாக சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு நிகராக எதிர்ப்புகளும் அதில் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, ` ஒரு சட்டமன்ற உறுப்பினரைப் போல, தொகுதி மக்களிடம் மரியாதையுடன் பேசுங்கள். உங்களுடைய சொந்தப் பணத்தில் ரூ.4 கோடி செலவு செய்ததாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை.
நீங்கள் அப்படிச் செலவு செய்யவும் இல்லை. அவர் ஏன் முதலமைச்சரிடம் சென்று கேள்வி கேட்க வேண்டும்? நீங்கள் காமராஜர் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். மக்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்’ என்று ஒருவரும், `யார் அதிகப் பொறுப்புள்ளவர், யார் அதிகப் பணம் செலவிட்டார் என்று மக்கள் கேட்கவில்லை.
பல ஆண்டுகளாக ஆட்சியும் வளர்ச்சிப் பணிகளும் நடைபெற்றும், ஏன் இன்னும் வெள்ளப் பாதிப்பால் அவதிப்படுகிறோம் என்பதுதான் அவர்களின் எளிய கேள்வி’ என்று எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்குப் பதில்களைப் பதிவிட்டு வருகின்றனர் தொகுதி மக்கள்.
மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரம்… VIJAY-க்கு நெருக்கடி | Decode
October 17, 2026
தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள்: “எத்தனை Leo Das, பவுடர் சரத்கள்?” – ஸ்டாலின் சாடல்
October 17, 2026
இதுவரை வாங்கிய ரஷ்ய எண்ணெய்க்கு 'நோ' 100% வரி! ட்ரம்ப்-ன் 'ட்விஸ்ட்'; இந்தியாவுக்குச் சாதகமானதா?
October 17, 2026
காவிரி விவகாரம்: "தமிழக அரசு திட்டமிடல் இல்லாமல் தண்ணீரைத் திறந்துவிட்டது" – இபிஎஸ் குற்றச்சாட்டு
October 17, 2026
'மீண்டும் ஒரு முறை கடத்தல்; இது வெறும் தடுப்புக் காவல் அல்ல! நேஹா எங்கே!' – நேஹா போரா கைது !
October 16, 2026
சௌதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்
October 16, 2026
Gold rate: ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா? வீக் எண்டில் தங்கம் வாங்குற பிளான் இருக்கா?
October 17, 2026
மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரம்… VIJAY-க்கு நெருக்கடி | Decode
October 17, 2026
Miley Cyrus Tearfully Pays Tribute to Dolly Parton With “Jolene” Performance at Hollywood Bowl: “Me and Dolly, We Are Eternal”
October 17, 2026
தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள்: “எத்தனை Leo Das, பவுடர் சரத்கள்?” – ஸ்டாலின் சாடல்
October 17, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 முக்கிய அப்டேட்..!! ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு அரசு நடவடிக்கை..!!
October 17, 2026
APOD: 2026 October 17 – 3D 67P
October 17, 2026