‘கனா காணும் காலங்கள்’, ‘அங்காடித் தெரு’ போன்ற தொலைக்காட்சி மற்றும் சினிமா படைப்புகள் மூலமாகப் பிரபலமானவர் நடிகர் பிளாக் பாண்டி.
இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனிலும் அவர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், பிறகு உடல்நலக் குறைவு காரணமாக அவர் வெளியேறினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தொடர்பாகப் பேசியது எதிர்மறையாகப் பரவிவிட்டது எனவும், தற்போது மீண்டும் அதனைத் தவறாகச் சித்தரித்து பதிவிட்டு வருவதாகவும் விளக்கமளித்து காணொளி ஒன்றை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தக் காணொளியில் அவர், “எட்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு நேர்காணலில், என்னிடம் ஒவ்வொரு கலைஞர்களைப் பற்றியும் கேட்டபோது சிவகார்த்திகேயனைப் பற்றியும் கேட்டார்கள்.
அப்போது எங்களுக்குள் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அக்காலகட்டத்தில் எனக்குப் பணப்பற்றாக்குறையும் சில சிரமங்களும் இருந்தன. அதுபற்றி அறிந்த சிவகார்த்திகேயன், ஒரு நல்ல நண்பனாக எனக்கு உதவும் எண்ணத்தில் தனது மேனேஜர் மூலமாகப் பணமனுப்பி வைத்திருந்தார்.
ஆனால், என் கை, கால்கள் நன்றாக இருக்கும் பொழுது அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள என் மனது ஒப்பவில்லை.

‘எனக்குப் பணம் தேவையில்லை, வாய்ப்புகள் இருந்தால் கொடுங்கள்’ என்று கூறி, அவர் கொடுத்தனுப்பிய பணத்தில் இருந்து 20 ரூபாய்யை மட்டும் அடையாளத்திற்காக வாங்கி சாமி படத்திற்கு முன் வைத்துவிட்டு, மீதிப் பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டோம்.
இதை நான் நேர்காணலில் இயல்பாகச் சொன்னது, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு எதிர்மறையாகப் பரவத் தொடங்கிவிட்டது. உடனடியாக நான் அந்தக் குழுவிடம் பேசி, யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதால் நேர்காணலிலிருந்து அந்தப் பகுதியை நீக்கச் சொன்னேன். அவர்களும் நீக்கிவிட்டார்கள்.
அதன் பிறகு, நான் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து, ‘நண்பா, உன்னிடம் பணம் வாங்கி உன்னை ஏமாற்ற எனக்கு விருப்பமில்லை. எனக்கு உழைத்துச் சாப்பிடும் தெம்பு இருக்கிறது. ஒருவேளை நான் படுத்த படுக்கையாக இருந்தால் நீ செய்யும் உதவி பெரிது. அதனால்தான் வாங்கவில்லை’ என்று விளக்கினேன்.
சிவகார்த்திகேயனும் அதை மிகவும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு, ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா, மேற்கொண்டு வாய்ப்புகள் வரும்போது பார்க்கலாம்’ என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆனால், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் சமூக வலைத்தளங்களில், ‘வாய்ப்பு கேட்கப்போனால் பணத்தைக் கொடுத்து அசிங்கப்படுத்தினார், சிவகார்த்திகேயனால் உடைந்த பிளாக் பாண்டி’ என்று தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். திரையுலகில் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுதான் ஓர் இடத்திற்கு வருகிறார்கள்.

யூடியூப் மற்றும் ஊடக நண்பர்கள் தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி சிவகார்த்திகேயனின் பெயருக்குக் களங்கம் விளைவிக்காதீர்கள். என்னையும் உணவிற்கே வழியில்லாதவன் போலச் சித்தரிக்காதீர்கள்.
மீண்டும் இந்த விஷயத்தால் சிவகார்த்திகேயனுக்குச் சங்கடம் ஏற்பட்டிருந்தால், அவருக்கு என் வருத்தத்தையும் ‘மன்னித்துவிடு நண்பா’ என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் நேயர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்துச் செய்திகளையும் உடனே நம்பாமல், பின்னணியில் இருக்கும் உண்மையை உணர்ந்து நம்புமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.
Jailer 2: ஷீலா கதாபாத்திரத்தை படத்தில் உருவக்கேலி செய்தார்களா? – விளக்குகிறார் நேன்சி திவ்யா
October 25, 2026
கண்ணம்மாவுக்கு துரோகம் பண்றியானு.. ரோட்டில் வெச்சி அடிச்சாங்க.. பரீனா ஆசாத்
October 25, 2026
ராவணனை கடத்தியது குணசேகரனா? ஜனனிக்கு வந்த சந்தேகம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
October 25, 2026
கீர்த்தி சுரேஷ் காட்டிய அன்பு மறக்க முடியாது.. நெகிழ்ந்து போன டோரதி பட நடிகை
October 25, 2026
நடிகர் பிரேம் குமார் வீட்டில் விசேஷம்.. ஸ்டாலின், சீமான் பங்கேற்ற பிரம்மாண்ட திருமண வரவேற்பு
October 25, 2026
ஆண்ட்ரியாவுடன் சூப்பர் டான்ஸ்.. பழைய பன்னீர்செல்வமாக மாறிய சிம்பு.. செம எனர்ஜி ப்பா!
October 25, 2026
INDIA bloc will continue protests until Gyanesh Kumar resigns, says Praveen Chakravarty
October 25, 2026
Gem Granites Veeramani case: Chennai Police issue LOC restraining five suspects from leaving India
October 25, 2026
‘Gem Granites’ Veeramani POCSO cases in Tamil Nadu: a compilation
October 25, 2026
'தி கோல்டன் சேரியட்' சொகுசு ரயிலில் ஒரு இன்ப சுற்றுலா.. கொடியசைத்து தொடங்கி வைத்த டிகே சிவக்குமார்!
October 25, 2026
கனமழை: திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு
October 25, 2026
Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம்
October 25, 2026