சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் ஆங்கிரிங் பண்ணும்போது எந்த கவலையும், பிரஷரும் இல்லாமல் இருந்தது. அதுதான் எனக்கு சினிமாவில் ரசிகர்களை கொடுத்தது.

என் மீது காசு போட்டு படம் எடுக்கலாம் என்று தயாரிப்பாளர்களை உருவாக்கியது. அதை மறக்கவே மாட்டேன். நான் டிவியில் இருந்தபோது சினிமா பண்ண வேண்டும் என்று பலர் சொன்னார்கள்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

அப்போது பசங்க பட இயக்குநர் பாண்டியராஜ் படம் பண்ண இருந்தார். நான் ஆடிசன் போனேன். மறுநாளே உங்களுக்கு படப்பிடிப்பு இருக்கிறது. மெரினா வந்திடுங்கள் என்றார்.

எனக்கு பயம், சந்தேகம் இருந்தது. அதனால், பட போஸ்டர் வரும் வரை அந்த படம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. ஒருநாள் என் பட போஸ்டர் வந்தபோது என் அம்மா கேட்டார்.

ஆமாம், படம் பண்ணுகிறேன் என்று சொன்னேன். உன் மனைவிக்கு தெரியுமா? என்று கேட்டார். இன்னும் சொல்லவில்லை என்றேன். அப்படி தான் அந்தப் படத்தில் நடித்தேன்.

பெண் வேடம் உட்பட பல கேரக்டரில் நடித்துவிட்டேன். அதை துணிந்து நடித்த என் சொந்த கேரக்டரை ரொம்ப பிடிக்கும். பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் பார்த்து நடிக்கவில்லை.

அனைத்து படங்களையும் ரசித்து 60, 70 நாட்கள் நடிக்கிறேன். அடுத்து அமரன் மாதிரி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். வில்லன் கேரக்டர் எனக்கு வரவில்லை.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

நான் மக்களை என்டர்டெயின்ட்மென்ட் பண்ண ஆசைப்படுகிறேன். அதனால், வில்லனாக நடிக்க யோசித்து பார்க்கவில்லை. அப்படி சில கதைகள் வந்து இருக்கிறது.

ஒருவேளை ஜாலியாக, பொழுது போக்கு வில்லனாக, டூயட் ரோல் ஆக அமைந்தால் நல்லா இருக்கும். ஹீரோவாக ஏற்றபின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in Cinema
6 எபிசோட்.. த்ரில்லர் வேட்டை.. சரவணன், வரலட்சுமியின் 'சட்டமும் நீதியும் 2' வெப் தொடர் விமர்சனம்! 6 எபிசோட்.. த்ரில்லர் வேட்டை.. சரவணன், வரலட்சுமியின் 'சட்டமும் நீதியும் 2' வெப் தொடர் விமர்சனம்! October 27, 2026 எடை குறைப்பு சிகிச்சையால் வந்த ஆபத்தா? சிம்புவின் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி.. அந்தணன் விளக்கம் எடை குறைப்பு சிகிச்சையால் வந்த ஆபத்தா? சிம்புவின் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி.. அந்தணன் விளக்கம் October 27, 2026 இழவு வீட்டுல VIP தரிசனம் கேட்குறாரா? அஜித்தை வெளுத்து வாங்கிய பாலாஜி பிரபு! இழவு வீட்டுல VIP தரிசனம் கேட்குறாரா? அஜித்தை வெளுத்து வாங்கிய பாலாஜி பிரபு! October 27, 2026 பாரடைஸ் நானி மாதிரி இருக்கீங்க? வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்! பாரடைஸ் நானி மாதிரி இருக்கீங்க? வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்! October 27, 2026 ‘கொலையாளி அல்ல; நான் காதலன்!' ஷாருக்கானின் கிங் படக் கதையே இதுதானா! ‘கொலையாளி அல்ல; நான் காதலன்!' ஷாருக்கானின் கிங் படக் கதையே இதுதானா! October 27, 2026 தீபாவளி ரேஸில் சேஃப் ஜோனில் விஜய் ஆண்டனி.. ஓடிடி உரிமத்தை பெத்த தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்! தீபாவளி ரேஸில் சேஃப் ஜோனில் விஜய் ஆண்டனி.. ஓடிடி உரிமத்தை பெத்த தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்! October 27, 2026

See all 223 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *